'என்ன மேடம்.. வீடியோ ஏதோ லீக் ஆகிருக்கு போல.. ஆமா Enjoy பண்ணு..' நேரடி விமர்சனங்களை அசால்டாக டீல் பண்ணும் ஓவியா!
அந்தரங்க வீடியோ வெளியான நிலையில், அதைப் பார்த்து என்ஜாய் செய்யுமாறு நெட்டிசன்கள் கிண்டலுக்கு பளீரென பதிலளித்து திகைக்க வைத்துள்ளார் நடிகை ஓவியா.

தமிழ், மலையாள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இந்நிலையில், நேற்று ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலாகி, இந்திய அளவில் இவர் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், எதற்கும் சளைக்காமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
மறுப்பு தெரிவிக்காத ஓவியா
அந்தப் பதிவில் கமெண்ட் செய்த பலர் அந்தரங்க வீடியோ குறித்து நக்கலாக கூறி வந்தனர். பின் ஓவியாவிடம் தொடர்ந்து அதுகுறித்து பேசினர். இதற்கிடையில், அந்த வீடியோவில் உள்ளது தான் இல்லை என விளக்கமளிப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், அவர் வித்தியாசமாக அந்த கேலிகளையும் கிண்டல்களையும் கையாண்டு பதிலளித்து அனைவரையும் திகைக்க வைத்துள்ளார்.
வழக்கமாக ஒருவரின் அந்தரங்க புகைப்படமோ, வீடியோவை சோசியல் மீடியாவில் வெளிவந்தால், முதலில் அதை மறுக்கத்தான் செய்வார்கள். அதன் பின்னரே, அந்த வீடியோ குறித்தும், அது எப்படி வெளியானது என்பது குறித்தும் விளக்கமளிப்பர். ஆனால், நடிகை ஓவியா அனைவரிலிருந்தும் வேறுபட்டு பதிலளித்துள்ளார்.