Actress Nila : நம்ம நிலாவுக்கு டும் டும் டும்! காதலனை கரம் பற்றுகிறார்! திருமணத்திற்கு பின் இதுதான் முதல் வேலையாம்!
Actress Nila : தமிழ் திரைப்பட நடிகை நிலாவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினர் மீரா சோப்ரா. இவர் தமிழில் நிலா என்ற பெயரில் கடந்த 2005ம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யாவின் அன்பே ஆருயிரே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப்படம் வெளியான காலத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வித்யாசமான கதைக்களம் மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுக்காக பிரபலமானது.
அப்போது நிலவும் பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்து பிரபலமான தமிழ் படங்கள் மருதமலை, லீ, ஜாம்பவான் ஆகியவை ஆகும்.
இவர் தெலுங்கிலும் நடித்து வந்தார். பங்காரம் என்ற படத்தில் பவன் கல்யானுடன் நடித்தார். பாலிவுட்டில் இவர் விக்ரம் பட்டுடன் 1920 லண்டன் என்ற படத்தில் ஷர்மன் ஜோஷியுடன் நடித்தார். சதீஷ் கவுசிக்குடன் கேங்க ஆஃப் கோஸ்ட் என்ற படத்திலும் நடித்தார். ஆனால் அவரை சினிமா பெரியளவில் கொண்டாடவில்லை. எனவே டில்லி திரும்பி தனது தந்தையின் ஓட்டல் தொழிலில் கவனம் செலுத்த துவங்கினார்.
ஒரு சிறிய இடைவெளிக்குப்பின்னர், இந்தியில் கடந்த ஆண்டு சாபட் என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். ஓடிடி தளங்களின் வரவுக்குப்பின்னர், வெப் சீரிஸ்கள் தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 40 வயதாகிறது. இவர் தற்போது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார்.
இவர் ரக்ஷித் கெஜ்ரிவால் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவரது காதலர் பெயர் ரஷித். இவர் மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆவார். தனது திருமணம் குறித்த தகவலை மீரா சோப்ரா அதிகாரப்பூர்வமாக எங்கும் அறிவிக்கவில்லை. ஆனால், இவரது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் மார்ச் 12ம் தேதி அன்று நடக்கிறது. இரண்டு நாட்கள் இவரது திருமணம் சடங்குகள் நடக்கிறது. மார்ச் 11ம் தேதி திருமண நிகழ்ச்சிகள் துவங்குகிறது. இதில் 150 பேர் மட்டும் கலந்துகொள்கிறார்கள். திருமணம் இந்து முறைப்படி நடக்கிறது. திருமணத்திற்காக நிலா மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று ஜெய்ப்பூர் புறப்படுகிறார்கள். திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவரே முன்னின்று கவனிக்கிறார்.
நிலா என்கிற மீரா சோப்ரா தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவில் பெரும்பாலும் காட்டிக்கொள்வதில்லை. திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்த திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இவரது திருமண பத்திரிக்கைப்படி, மெஹந்தி நிகழ்ச்சி மார்ச் 11ம் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து சங்கீத், இரவு விருந்தும் அன்று நடக்கிறது. மார்ச் 12ம் தேதி ஹல்தியும் இரவு, ஃபேராசும் நடக்கிறது.
இவரது உறவினர்கள் பிரியங்கா சோப்ரா மற்றும் பரிநீதி சோப்ராவும் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்குப்பின் நிலா தயாரிப்பாளர் அவதாரமும் எடுக்கிறார். ஜெய்ப்பூரில் தனது காதலரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் நிலாவுக்கு ஹெச்டி தமிழ் சார்பில் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் வாழ்வில் எல்லா நலன்களையும், வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்