‘நான் அவர கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்.. என்னால எவ்ளோ கஷ்டம்.. ’ வருந்திய நயன்தாரா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘நான் அவர கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்.. என்னால எவ்ளோ கஷ்டம்.. ’ வருந்திய நயன்தாரா

‘நான் அவர கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்.. என்னால எவ்ளோ கஷ்டம்.. ’ வருந்திய நயன்தாரா

Malavica Natarajan HT Tamil
Dec 17, 2024 10:29 PM IST

நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாம் என பலமுறை யோசித்திருப்பதாக கூறியுள்ளார்.

‘நான் அவர கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்.. என்னால எவ்ளோ கஷ்டம்.. ’வருந்திய நயன்தாரா
‘நான் அவர கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்.. என்னால எவ்ளோ கஷ்டம்.. ’வருந்திய நயன்தாரா

கல்யாணத்தால் கிண்டலுக்கு உள்ளான விக்கி

நான் நயன்தாராவை திருமணம் செய்தபோது நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கும் என எல்லாம் கிண்டல் செய்ததாக கூறி இருப்பார். அத்துடன், நயன்தாராவின் கணவர் என்பதால் தான் அவருக்கு இத்தனை பேரும் புகழும் கிடைத்ததுடன், பட வாய்ப்புகளும் கிடைப்பதாக பலரும் கூறி வந்தனர்.

கல்யாணம் செய்திருக்கவே கூடாது

இந்நிலையில், நயன்தாரா தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமலே இருந்திருக்கலாமோ என யோசித்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் பல நேரங்களில் விக்னேஷ் சிவனை கல்யாணம் செய்யாமல் இருந்திருக்கலாம். நாங்கள் ஒன்றாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று யோசித்திருக்கிறேன்.

குற்ற உணர்ச்சி

அவரை திருமணம் செய்ததற்காக பல நேரம் குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கிறேன். நான் தான் அவரை காதலித்தேன். அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தேன், ஒருவேளை அவர் என்னை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் ஒரு இயக்குநராக, பாடலாசிரியராக, எழுத்தாளராக அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கிகாரத்தை பெற்றிருப்பார்.

விக்னேஷ் சிவன் ஒரு புனிதமான ஆத்மா என நான் நினைக்கிறேன். நான் நல்லவள் என்பது எனக்கு தெரியும். ஆனால், அவரைப் போல நல்லவளா என்றால் இல்லை. அவர் போல யாரும் வரமுடியாது.

அவரை விமர்சிப்பதில் நியாயம் இல்லை

நாங்கள் ஒருவர் மீது வைத்திருக்கும் அன்பு, மரியாதை ஆகியவை, அவர்கள் தொடர்ந்து சந்திக்கும் எதிர்மறையான செயல்களால் காணாமல் போகின்றன. இங்கு இருக்கும் அனைவரும், ஒருவர் அவருக்கு சமமான அந்தஸ்தில் இருப்பவர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கு பல காரணங்கள் உள்ளது.

விக்னேஷ் சிவன் ஆடம்பரத்தையும், என் வெற்றியையும் பார்த்து என்னை திருமணம் செய்து கொள்ள வில்லை. அதனால், என்னை மையப்படுத்தி என் கணவரை விமர்சிப்பதில் துளி கூட நியாயமே இல்லை எனக் கூறி இருக்கிறார்.

நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல்

ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமான நயன்தாரா, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகையாக மாறினார். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பெற்ற தோல்விகளை பொது இடங்களில் மறைக்காமல், அதனை மறக்காமல் வெளிப்படையாகவும் பேசி வருகிறார். இதை பலரும் கிண்டல் செய்திருப்பினும் கூட அதை பெரிதுபடுத்தாமல் தன் 20 ஆண்டுகளாக திரைப் பயணத்தை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்,

முன்னதாக, நடிகை நயன்தாராவின் ஆவணப்படமான நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரிடேல் படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக பிரச்சனை எழுந்தது. இதையடுத்து தனுஷிற்கு எதிரான கருத்துகள் கூறி தொடர் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார்,

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.