'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்

'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்

Malavica Natarajan HT Tamil
Published May 12, 2025 09:45 PM IST

வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷத்தை தேர்ந்தெடுங்கள். ஏனென்றால் வாழ்க்கையில் ரீவைண்ட் பட்டன் இல்லை என நடிகை நயன்தாரா கருத்து தெரிவித்துள்ளார்.

'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்
'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்

அன்னையர் தினம்

நேற்று உலகம் முழுவதும் அன்னையர் தினத்தை கொண்டாடி வந்த நிலையில், நயன்தார தன் இரண்டு குழந்தைகளுடனும் இருக்கும் புகைப்படத்தையும், அன்னையர் தின கொண்டாட்ட புகைப்படங்களையும் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் பகிர்ந்திருந்தார். அந்தப் புகைப்படங்களை நடிகை நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

எப்போதும் சந்தோஷம்

அத்தோடு, அவர் புத்தகத்தில் உள்ள ஒரு வாக்கியத்தையும் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். நிறைய புகைப்படங்கள் எடுக்க வேண்டும், உங்கள் வாழ்க்கையின் அனைத்து நினைவுகளையும் ஆவணப்படுத்த வேண்டும். அத்தனையையும் கொண்டாட வேண்டும். ஏனென்றால் வாழ்க்கையில் ரீவைண்ட் பட்டனே கிடையாது என எழுதப்பட்டுள்ளது.

கொண்டாடும் ரசிகர்கள்

இதைப் பார்த்த ரசிகர்கள் நயன்தாரா ரசிகர்கள் அவருடைய கருத்துக்கு ஒத்துப் போவதுடன், அதிலுள்ள வார்த்தைகளையும் கொண்டாடி வருகின்றனர். காரணம் பலரும் வாழ்க்கையில் இருக்கமாகவே உள்ளனர். அத்துடன் கொண்டாட்டங்கள் குறைவாகவே உள்ளது. இப்படியான சூழலில் நயன்தாராவின் பதிவு அனைவரையும் சற்று யோசிக்க வைத்து வாழ்க்கையை ரசிக்க வைத்துள்ளது.

நயந்தாரவும் சர்ச்சைகளும்

சில நாட்களுக்கு முன், நயன்தாரா திருமணம், குழந்தை பிறப்பு, நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் ஆவணப்படம், தனுஷிற்கு எதிரான அறிக்கை, தனுஷ் தொடர்ந்த வழக்கு, யூடியூபர்ஸ்களை விமர்சனம் செய்தது, விக்னேஷ் சிவனை தொடர்ந்த சர்ச்சைகள் என அடுக்கடுக்கான பிரச்சனைகளை சந்தித்த போதும், என்ன நடந்தாலும் சிரிச்சிட்டு போயிட்டே இருக்கனும் என நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் எடுத்த செல்ஃபி வீடியோவை பகிர்ந்து கருத்து சொல்லி இருப்பார்.

நயன்தாராவின் படங்கள்

நயன்தாரா நடிப்பில் கடைசியாக டெஸ்ட் படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து தன் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தை தயாரிக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜெயம் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஆட்டோ ஜானி, மலையாள திரைப்படமான டியர் ஸ்டூடண்ட்ஸ், செந்தில் நல்லசாமி இயக்கத்தில் ராக்காயி, சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2, நடிகர் யோகிபாபுவுடன் இணைந்து மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, மஞ்சு இயக்கத்தில் கண்ணப்பா, யாஷ் உடன் இணைந்து டாக்சிக் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.