Actress Namitha on Vijayakanth: ‘விஜயகாந்தான் உயிர் கொடுத்தார்.. சேரில் உட்காரவே மாட்டார்; சமாதியில் கண்கலங்கிய நமீதா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Namitha On Vijayakanth: ‘விஜயகாந்தான் உயிர் கொடுத்தார்.. சேரில் உட்காரவே மாட்டார்; சமாதியில் கண்கலங்கிய நமீதா!

Actress Namitha on Vijayakanth: ‘விஜயகாந்தான் உயிர் கொடுத்தார்.. சேரில் உட்காரவே மாட்டார்; சமாதியில் கண்கலங்கிய நமீதா!

Kalyani Pandiyan S HT Tamil
May 10, 2024 08:53 PM IST

“என்னுடைய பிறந்தநாளான இன்று எனக்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். தமிழ்நாட்டில் எனக்கு உயிரை கொடுத்தது விஜயகாந்த் அவர்கள்தான்.” - நமீதா!

Actress Namitha on Vijayakanth: ‘விஜயகாந்தான் உயிர் கொடுத்தார்.. சேரில் உட்காரவே மாட்டார்; சமாதியில் கண்கலங்கிய நமீதா!
Actress Namitha on Vijayakanth: ‘விஜயகாந்தான் உயிர் கொடுத்தார்.. சேரில் உட்காரவே மாட்டார்; சமாதியில் கண்கலங்கிய நமீதா!

அவர் பேசும் போது, "இன்றைக்கு என்னுடைய பிறந்தநாள். அதற்காக கோயிலுக்கு சென்று பூஜைகள், அபிஷேகம் அன்னதானம் உள்ளிட்டவற்றை செய்தேன். நான்  இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால், விஜயகாந்த் இறந்த நேரத்தில், என்னால் அவருக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. 

தமிழ்நாட்டில் எனக்கு உயிரை கொடுத்தது விஜயகாந்த் அவர்கள்தான்.

 

என்னுடைய பிறந்தநாளான இன்று எனக்கு அவருடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத்தான் நான் இங்கு வந்தேன். தமிழ்நாட்டில் எனக்கு உயிரை கொடுத்தது விஜயகாந்த் அவர்கள்தான். 

அவரிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். படப்பிடிப்பின் போது அவர் சேரில் உட்கார மாட்டார். அவரது கழுத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதிகளில் கர்சீப் கட்டி இருப்பார். எதற்காக என்றால் மேக்கப், சட்டையில் பட்டு, சட்டை நாசமாகி விடக்கூடாது என்பதற்காக...

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்; அதற்காகத்தான் இப்படி இருக்கிறேன்!

 

ஒரு நாள் நான் அவரிடம், ஏன் சேரில் உட்கார மறுக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர் எப்பொழுதுமே வேலை செய்யும் இடத்தில், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் அதற்காகத்தான் இப்படி இருக்கிறேன் என்று சொன்னார்.

அதனைதொடர்ந்து நானும் படப்பிடிப்பில் அவ்வாறு இருக்க முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அது முடியவில்லை. அவர் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். ஒரு ராஜா போல அமர்ந்திருப்பார்” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே நமீதா கண்கலங்கினார். 

கடந்த 28ஆம் தேதி இயற்கை எய்தினார்.

 

நடிகரும் தேதிமுக நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவால் கடந்த 28ஆம் தேதி இயற்கை எய்தினார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் உட்பட பலரும் நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர். அன்று வரமுடியாதவர்கள் சிறிது நாட்களுக்கு பிறகு வந்து தங்களுடைய அஞ்சலியை அவருக்கு செலுத்தினர். அண்மையில் விஜயகாந்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதனை அவரது மனைவியான பிரேமலதா விஜயகாந்த் டெல்லி சென்று வாங்கினார்.  

விருதை நாங்கள் நேரடியாக சமர்பிக்கிறோம்

 

அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், “  கேப்டன் இல்லை என்ற வலி எங்களுக்குள் இருக்கிறது. இந்த சமயத்தில் கேப்டன் நம்முடன் இல்லை என்றாலும், அவருக்கு இந்த விருதை நாங்கள் நேரடியாக சமர்பிக்கிறோம். விருதை சென்னையில் உள்ள விஜயகாந்தின் கோயிலில், அவரது காலடியில் வைத்து சமர்பிப்போம்." என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.