Myna Nandhini: ‘இவளுக்கெல்லாம் இப்படி ஒரு வாய்ப்பான்னு.. வாய்க்கு வந்த படியெல்லாம்.. கடவுள் எனக்கு அவ்வளவு’-நடிகை மைனா!
Myna Nandhini: “கடவுள் யாருக்குமே கொடுக்காத கஷ்டத்தை எனக்கு கொடுக்கிறார் என்றால், அவர் நான்தான் அப்படிப்பட்ட ஒரு கஷ்டத்தை தாங்குவேன் என்று நினைக்கிறார் என்று எடுத்துக்கொள்வேன். என்னுடைய மனநிலையையே அப்படியே மாற்றிக் கொண்டேன்.” - நடிகை மைனா!
Actress myna nandhini: ‘வெண்ணிலா கபடி குழு’, ‘ வம்சம்’ ‘வெப்பம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தாலும், நந்தினியை அனைவருக்கும் அடையாளம் காண வைத்தது விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சரவணன் மீனாட்சி 2 தொடரில் அவர் ஏற்று நடித்த மைனா கதாபாத்திரம்தான்.
தொடர்ந்து, பல சீரியல்கள், படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்ற இவர், பிக்பாஸ் சீசன் 6 லும் போட்டியாளராக பங்கேற்றார். அதில் நைட் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்டார். இவர் தற்போது சட்னி, சாம்பார் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். அந்தப்படம் தொடர்பாக லிட்டல் டாக்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், தன் மீது சோசியல் மீடியாவில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
மைனா நந்தினி பேட்டி
இது குறித்து அவர் பேசும் போது, “ கடவுள் யாருக்குமே கொடுக்காத கஷ்டத்தை எனக்கு கொடுக்கிறார் என்றால், அவர் நான்தான் அப்படிப்பட்ட ஒரு கஷ்டத்தை தாங்குவேன் என்று நினைக்கிறார் என்று எடுத்துக் கொள்வேன். என்னுடைய மனநிலையையே அப்படியே மாற்றிக் கொண்டேன்.
என்னுடைய வாழ்க்கையில், நான் நிறைய இடங்களில் நெகட்டிவிட்டியை எதிர்கொண்டு விட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நெகட்டிவிட்டி உங்களை நோக்கி வந்து கொண்டே தான் இருக்கும். கொஞ்ச காலம் நெகட்டிவிட்டியே என்னை நோக்கி வரவில்லை என்றால், வாழ்க்கையின் மீது எனக்கு சந்தேகம் வந்துவிடும்.. என்ன நெகட்டிவிட்டியே இப்போது வருவதில்லை என்ற எண்ணம் தோன்றிவிடும்.
நமக்குதான் தெரியும்
சில வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்பொழுது, இவளுக்கெல்லாம் இப்படிப்பட்ட வாய்ப்பா என்று கூட சொல்லி இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் அந்த வாய்ப்பை நாம் கைகொள்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது நமக்கு தான் தெரியும். ஆகையால், அப்படி சொல்பவர்களை நாம் கண்டு கொள்ள தேவையே இல்லை. நாம் அதிகமாக சிரித்தால், அதிகமாக சிரிக்கிறாள் என்று சொல்வார்கள். கம்மியாக சிரித்தால் இவள் கெத்து காட்டுகிறாள் என்று சொல்வார்கள். நாம் என்ன செய்தாலும், நம்மை குறை சொல்வதற்கென்று இங்கு ஒரு கூட்டம் இருக்கிறது. ஆகையால் அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.
நாம் நம்முடைய வேலையை மட்டும் பார்த்து சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான். நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, அதனுடைய பிரதிபலிப்பு வெளியே தெரியும் பொழுது, உங்களைப் பற்றி தவறாக பேசியவர்கள், நல்லவிதமாக பேசும் நிலைக்கு வருவார்கள். அதற்கு நாம் முதலில் உழைக்க வேண்டும். அந்த உழைப்பு அவர்களுக்காக அல்லாமல் நமக்காக இருக்க வேண்டும்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்