Actress Mumtaz: ‘மார்க்கெட் போனதால இஸ்லாமா?.. எனக்கும் குழந்தை இல்லையேன்னு..’ - வெகுண்டெழுந்த மும்தாஜ்!
உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்று... என்னை விட வயது மிகுந்த பெண்கள் இன்றும் நன்றாக வொர்க் அவுட் செய்து, தன்னை அழகாக மாற்றி, கிளாமராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அல்லா எனக்கு வழிகாட்டவில்லை என்றால், நானும் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருப்பேன்.
சினிமாவில் நடித்துக்கொண்டிந்த தான் ஏன் அதில் இருந்து விலகி இஸ்லாம் மதத்திற்குள் ஆழமாக இறங்கினேன் என்பது குறித்து மும்தாஜ் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் இந்த பரிணாமத்திற்கு மாறுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. என்னுடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் நிறைய வந்தன.
பொதுவாகவே நான் இஸ்லாமிய கருத்துக்களை அதிகமாக கேட்பேன். அதனை தொடர்ந்துதான் ஏதோ எனக்குள் நடந்ததை என்னால் உணர முடிந்தது. அந்த சமயத்தில் குஷி படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த திரைப்படம் வெளியே வந்த நான் மிகவும் பிஸியாகி விட்டேன்.
ஒன்றை நான் இங்கே தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் நான் சினிமாவிற்கு பணம் சம்பாதிப்பதற்காக வரவில்லை. நான் இந்த துறையில் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர், எனக்குள் பெரிய பொருளாதார சுதந்திரமானது கிடைத்தது. அதனை தொடர்ந்து இனி குடும்பத்தில் பணம் கேட்கக் கூடாது என்று உறுதி செய்து நிறைய படங்களில் நடித்தேன்.
அதன் மூலம் கிடைத்த பணத்தில், எனக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொண்டேன். ஒரு கட்டத்தில் நான் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதற்கு காரணம் என்னவென்றால் நாம் ஒரு விஷயத்துக்கு பணிவுடன் இருக்கிறோம் என்றால், அங்கிருந்து வரும் கட்டளைகளுக்கு நான் அடிபணிய வேண்டும். ஆனால் எனக்கு எதற்கு நான் பணிய வேண்டும், எதற்கு நான் பணிய கூடாது என்பதில் குழப்பம் இருந்தது
பலரும் மும்தாஜ் பிரபலத்திற்காக இவ்வாறெல்லாம் இஸ்லாத்தை பயன்படுத்துகிறார் என்று சொல்கிறார்கள். உங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இன்னும் சில பேர் ஒரு படி மேலே போய், உங்களுக்கு மார்க்கெட் போய்விட்டது அதனால் தான் இன்ஸ்டாகிராமில் இப்படியான வீடியோக்களை பதிவிடுகிறீர்கள் என்றெல்லாம் மெசேஜ் அனுப்புகிறார்கள்.
உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு மார்க்கெட் போய் விட்டது என்று... என்னை விட வயது மிகுந்த பெண்கள் இன்றும் நன்றாக வொர்க் அவுட் செய்து, தன்னை அழகாக மாற்றி, கிளாமராக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அல்லா எனக்கு வழிகாட்டவில்லை என்றால், நானும் தற்போது அதைத்தான் செய்து கொண்டிருப்பேன்.
எனக்கு 25, 26 வயது இருக்கும் பொழுது பொழுது தான் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நான் நிறைய வலிகளை அனுபவித்தேன். அதன் காரணமாகதான், நான் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்று திருமணம் செய்து கொள்ளவில்லை.
இன்றும் எனக்கு ஒரு குடும்பம் இல்லையே, குழந்தைகள் இல்லையே என்று தோன்றி கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விடாது அல்லவா. அல்லா ஒருவேளை எனக்கு எதிர்காலத்தில் கணவரை கொடுப்பானா என்பது தெரியவில்லை.
ஆனால் அதற்கு நான் மனதளவில் தயாராக இல்லை. காரணம் என்னவென்றால், என்னை நானே பார்த்துக் கொள்வதற்கு நேரம் சரியாக இருக்கிறது. இதில் நான் எப்படி இன்னொருவரை நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்