Actress Mohini: பொறாமையில் வைத்த செய்வினை; இரத்தம் கேட்டு துடித்த சாத்தான்; ஓடி வந்த குழந்தை இயேசு! - மோகினி பேட்டி
Actress Mohini: நான் என்னுடைய கணவரிடம், எனக்கு கல்யாணத்திற்கு பிறகுதான் இப்படி ஆக ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லி, கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவர் படித்தவர் என்பதால், என்னை சமாதானப்படுத்தி நிதானப்படுத்தினார். - மோகினி பேட்டி
(1 / 7)
பிரபல நடிகை மோகினி, தான் கிறிஸ்துவ பெண்ணாக மாறிய கதையை, கலாட்டா பிங்க் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
(2 / 7)
இது குறித்து அவர் பேசும் போது, “ஒரு கட்டத்தில் நாம் எதற்காக இந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. இதனையடுத்து நான் கொஞ்சம், கொஞ்சமாக மன அழுத்தத்திற்குள் செல்ல ஆரம்பித்தேன்.
எனக்கு கெட்ட,கெட்ட கனவுகள் வர ஆரம்பித்தன.
(3 / 7)
இதனையடுத்து நான் ஒரு ஜோசியரை சந்தித்து, எதற்காக இப்படியெல்லாம் திடீரென்று நடக்கிறது என்று கேட்டோம். அப்போது அவர் எனக்கு ஒருவர் செய்வினை வைத்திருப்பதாகவும், அந்த செய்வினையானது நான் தற்கொலை செய்து இறப்பது போல வைக்கப்பட்டு இருப்பதாகவும் சொன்னார்.
கொஞ்சம் நாளில், என்னுடைய தூக்கம் கெட ஆரம்பித்தது. என்னுடைய உடல் நலம் குன்ற ஆரம்பித்தது. உடல் நலம் இல்லாதது போல இருக்கும். ஆனால் சோதனை செய்து பார்த்தால், எல்லாம் நன்றாக இருப்பது போல இருக்கும்.
(4 / 7)
கல்யாணம் வேண்டாம்
இதனையடுத்து, நான் என்னுடைய கணவரிடம், எனக்கு கல்யாணத்திற்கு பிறகுதான் இப்படி ஆக ஆரம்பித்திருக்கிறது என்று சொல்லி, கல்யாணம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால், அவர் படித்தவர் என்பதால், என்னை சமாதானப்படுத்தி நிதானப்படுத்தினார்.
(5 / 7)
இதையடுத்துதான் நான் ஒரு சிவாச்சாரியாரை சென்று சந்தித்தேன். அவரிடம் செய்வினையெல்லாம் உண்மையா என்று கேட்டேன். அதற்கு அவர் நல்லது என்ற ஒன்று இருந்தால், கெட்டது என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும் என்று சொன்னார். இதையடுத்து நான் அது குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன்.
(6 / 7)
இயேசு கிறிஸ்து என்னை காப்பாற்றி இருக்கிறார்.
அப்போது நான் ஜோசியம்,ஜாதகம், நேரம், கர்மா இவை அனைத்தையும் கடந்த கடவுள் யார் என்று தேட ஆரம்பித்தேன். அப்போதுதான் என்னுடைய கனவில் இயேசு கிறிஸ்து வந்தார்.
இயேசு கிறிஸ்து எப்போது என்னுடைய கனவில் வந்தாரோ, அப்போதே எனக்கு விடுதலை கிடைக்க ஆரம்பித்து விட்டது. கெட்ட கனவுகள் தடைபட்டன. என்னுடைய உடல்நலம் தேற ஆரம்பித்தது. தற்கொலை எண்ணம் நின்றது. மனதில் ஒரு பெரும் நிம்மதி வர ஆரம்பித்தது.
(7 / 7)
என்னுடைய வாழ்க்கையில் பல முறை இயேசு கிறிஸ்து என்னை காப்பாற்றி இருக்கிறார். திடீரென்று அந்த மாதிரியான கெட்ட கனவுகள் வரும்பொழுது, என்னுடைய தற்கொலை எண்ணம் மேலோங்கும். அப்படி ஒரு முறை என்னுடைய கையை கத்தியை கொண்டு அறுத்துக் கொண்டேன். அருகில் என்னுடைய மகன் தூங்கிக் கொண்டிருந்தான்.
இதனால் நான் ஒரு பெரியத் துணியை எடுத்து கையில் சுற்றிக்கொண்டு அப்படியே படுத்து தூங்கி விட்டேன். காலையில் எழுந்து பார்த்தால், கொஞ்சம் ரத்தம் மட்டுமே வெளியே சென்று இருந்தது. எனக்கு நன்றாக தெரியும்;
நான் நரம்பை பார்த்துதான் அறுத்து இருந்தேன். அதேபோல இன்னொரு முறை எலி மருந்தை கோக்கில் கலந்து குடித்தேன். நானும் உடலுக்கு ஏதாவது ஆகும் என்று காத்திருந்தேன். ஆனால் எனக்கு எதுவும் ஆகவில்லை. இன்னொரு முறை கிட்டத்தட்ட 136 தூக்க மாத்திரைகளை அப்படியே சாப்பிட்டேன். ஒரு நாள் இரவு இரண்டு மணி இருக்கும் கிட்டத்தட்ட 136 தூக்க மாத்திரைகளை நான் அப்படியே சாப்பிட்டேன்." என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்