Actress Mohini: உதட்ட இழுத்து கடி; கண்ண அப்படி வை; இப்ப பாரு... செக்ஸிக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாடம் - மோகினி-actress mohini latest interview about kattum selai madippula sexy dance with siva sankar master - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Mohini: உதட்ட இழுத்து கடி; கண்ண அப்படி வை; இப்ப பாரு... செக்ஸிக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாடம் - மோகினி

Actress Mohini: உதட்ட இழுத்து கடி; கண்ண அப்படி வை; இப்ப பாரு... செக்ஸிக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாடம் - மோகினி

Kalyani Pandiyan S HT Tamil
Jul 14, 2024 11:51 AM IST

Actress Mohini: அவர் பேருக்குத்தான் ஆம்பளை. ஆனால் அவர் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷனைகளை எந்த நடிகையாலும், வெளிப்படுத்த முடியாது. - மோகினி

Actress Mohini: உதட்ட இழுத்து கடி; கண்ண அப்படி வை; இப்ப பாரு... செக்ஸிக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாடம் - மோகினி
Actress Mohini: உதட்ட இழுத்து கடி; கண்ண அப்படி வை; இப்ப பாரு... செக்ஸிக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாடம் - மோகினி

இது குறித்து அவர் பேசும்போது, "என்னுடைய பெரும்பான்மையான படங்களில் குட்டி டிரஸ் போட்டு ஆடுவது, பெல்லி பட்டன் டான்ஸ் உள்ளிட்டவையெல்லாம் இருக்காது. காரணம் என்னவென்றால், நான் நடன இயக்குனர்களை, அது போன்ற பாடல்களின் போது, பயங்கரமாக சிரமங்கள் கொடுத்து படுத்தி எடுத்து விடுவேன். சிவசங்கர் மாஸ்டருக்கு இது நன்றாகவே தெரியும். சிவசங்கர் மாஸ்டரை பொருத்தவரை அவர், ஹீரோயின்கள் கொடுக்கும் எக்ஸ்பிரஷ்களின் மொத்த உருவம் என்று சொல்லலாம்.

பேருக்குத்தான் ஆம்பளை

அவர் பேருக்குத்தான் ஆம்பளை. ஆனால் அவர் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷனைகளை எந்த நடிகையாலும், வெளிப்படுத்த முடியாது. ‘கட்டும் சேலை மடிப்பில’ பாடலில் அவர்தான் நடன மாஸ்டராக பணியாற்றினார். அப்போது எனக்கு 16 முதல் 17 வயது இருக்கும். அந்த படம் என்னுடைய கேரியரில் எனக்கு மிகவும் பிடித்தமான படம். காரணம் என்னவென்றால், அந்த படத்தின் இயக்குநர் விக்ரமன். அவருடன் வேலை பார்ப்பது என்பது எனக்கு மிக மிக சௌகரியமாக இருந்தது.

ஆனால் ‘கட்டும் சேலை மடிப்பில’ பாடலில் எனக்கு பெரிதாக உடன்பாடு இல்லை. அந்தப் பாடலின் இறுதியில் ‘சுண்ணாம்பு தடவிக்கலாமா’ என்று இழுத்து பாடியிருப்பார்கள். அதற்கு சிவசங்கர் மாஸ்டர் செக்ஸியான எக்ஸ்பிரஷனை கொடுக்கச் சொன்னார். அப்போது நான் இதெல்லாம் எனக்கு வராது மாஸ்டர் என்று கூறினேன்.

இதனையடுத்து அவர் அதனை எனக்கு பிரேக் டவுன் செய்து சொல்லிக் கொடுத்தார். அத்துடன் அவர் என்னிடம் கடவுள் உனக்கு அவ்வளவு அழகான கண்களை கொடுத்திருக்கிறார். இதை வைத்து நீ ரசிகர்களை மயக்க வில்லை என்றால் எப்படி? என்று உத்வேக படுத்தினார்.

மாஸ்டர் ஜி எனக்கு அதெல்லாம் வராது

இதைக் கேட்ட நான் மாஸ்டர் ஜி எனக்கு அதெல்லாம் வராது என்று மறுபடியும் கூறினேன்.ஆனால் அவர் விடுவதாக இல்லை. நான் சொல்வது படியே செய் என்று சொன்னார்... அவர் முதலில் உதட்டை கடி, இரண்டாவதாக கண்களை சுருக்கு, இப்போது ஆடியன்ஸை பார் என்றார். இதைக் கேட்டவுடன் அவ்வளவுதானா என்றேன். ஆமாம் அவ்வளவுதான் அதன்படியே செய் என்று சொன்னார்.

இதை எடுத்து டேக் ஆக்சன் என்று சொல்லி நடிக்கச் சொன்னார். நான் அவர் சொன்னபடியே செய்ய முயற்சித்தேன். அதைப் பார்த்து அவர் என்ன இது போன் வீட்டா குடித்துவிட்டு துடைப்பது போன்று நடிக்கிறாய் என்று சொன்னார். இதையடுத்து மாஸ்டர் நான் முதலிலேயே உங்களிடம் சொல்லி விட்டேன். எனக்கு இதெல்லாம் வராது என்று... என்று சொன்னேன்.

என்னுடைய படங்களில் ஏதாவது நான் செக்ஸியாக நடித்திருந்தேன் என்றால், அது ஏதோ அது இயல்பில் வந்திருக்கும் அவ்வளவுதான். அதனாலே என்னுடைய படங்களில் எனக்கு வரும் மாஸ்டர்கள் எனக்கு தகுந்தபடி நடனத்தை வடிவமைப்பார்கள்" என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.