Actress Mohini: உதட்ட இழுத்து கடி; கண்ண அப்படி வை; இப்ப பாரு... செக்ஸிக்கு அவர் சொல்லிக் கொடுத்த பாடம் - மோகினி
Actress Mohini: அவர் பேருக்குத்தான் ஆம்பளை. ஆனால் அவர் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷனைகளை எந்த நடிகையாலும், வெளிப்படுத்த முடியாது. - மோகினி

Actress Mohini: நடிகை மோகினி மாஸ்டர் சிவசங்கர் உடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பிஹைன்ட் வுட்ஸ் சேனலுக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பேட்டி கொடுத்தார்.அந்த பேட்டி இங்கே!
இது குறித்து அவர் பேசும்போது, "என்னுடைய பெரும்பான்மையான படங்களில் குட்டி டிரஸ் போட்டு ஆடுவது, பெல்லி பட்டன் டான்ஸ் உள்ளிட்டவையெல்லாம் இருக்காது. காரணம் என்னவென்றால், நான் நடன இயக்குனர்களை, அது போன்ற பாடல்களின் போது, பயங்கரமாக சிரமங்கள் கொடுத்து படுத்தி எடுத்து விடுவேன். சிவசங்கர் மாஸ்டருக்கு இது நன்றாகவே தெரியும். சிவசங்கர் மாஸ்டரை பொருத்தவரை அவர், ஹீரோயின்கள் கொடுக்கும் எக்ஸ்பிரஷ்களின் மொத்த உருவம் என்று சொல்லலாம்.
பேருக்குத்தான் ஆம்பளை
அவர் பேருக்குத்தான் ஆம்பளை. ஆனால் அவர் வெளிப்படுத்தும் எக்ஸ்பிரஷனைகளை எந்த நடிகையாலும், வெளிப்படுத்த முடியாது. ‘கட்டும் சேலை மடிப்பில’ பாடலில் அவர்தான் நடன மாஸ்டராக பணியாற்றினார். அப்போது எனக்கு 16 முதல் 17 வயது இருக்கும். அந்த படம் என்னுடைய கேரியரில் எனக்கு மிகவும் பிடித்தமான படம். காரணம் என்னவென்றால், அந்த படத்தின் இயக்குநர் விக்ரமன். அவருடன் வேலை பார்ப்பது என்பது எனக்கு மிக மிக சௌகரியமாக இருந்தது.