Ajith Kumar: அஜித் படத்தால் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு.. புலம்பும் நடிகை மனோசித்ரா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith Kumar: அஜித் படத்தால் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு.. புலம்பும் நடிகை மனோசித்ரா..

Ajith Kumar: அஜித் படத்தால் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு.. புலம்பும் நடிகை மனோசித்ரா..

Malavica Natarajan HT Tamil
Published Feb 07, 2025 04:23 PM IST

Ajith Kumar: அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை மனோசித்ரா, தான் சினிமாவை விட்டு விலக காரணம் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.

Ajith Kumar: அஜித் படத்தால் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு.. புலம்பும் நடிகை மனோசித்ரா..
Ajith Kumar: அஜித் படத்தால் சினிமா வாழ்க்கையே போயிடுச்சு.. புலம்பும் நடிகை மனோசித்ரா..

இவரின் இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன, சினிமா வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகள் உள்ளிட்டவை குறித்து அவர் ஆதன் சினிமா யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

ஆக்சிடென்ட்டா சினிமாவுக்கு வந்தேன்

அந்தப் பேட்டியில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களையும் கூறியுள்ளார். அந்தப் பேட்டியில், " நான் சினிமாவிற்கு வந்ததே ஒரு ஆக்டிடென்ட் தான். நான் காஞ்சிபுரம் பொன்னு. அப்பப்போ காமாட்சி அம்மன் கோவிலுக்கு போற பழக்கம் இருக்கு. அந்த சமயத்துல தான் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பட வாய்ப்பு வந்த போது நான் 9வது தான் படித்துக் கொண்டிருந்தேன். இதற்காக என்னை போட்டோ ஷூட் எல்லாம் செய்தார்கள்.

ஆனால், நான் முதலில் நடித்து வந்த படமாக உருவானது அவள் பெயர் தமிழரசி தான். இந்தப் படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடிக்குழு என நிறைய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு பறிபோனது.

நீர் பறவை படத்தால் ஏமாற்றம்

இருந்தாலும், அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்ததால் தன் மீது நல்ல இமேஜ் இருந்த சமயத்தில் தான் நீர்பறவை படத்தில் நடிப்பதற்காக அழைத்தனர். அந்தப் படத்தில் விருது வாங்கிய நடிகர்கள் மட்டும் தான் நடிக்கிறார்கள் என என்னை சமாதானம் செய்து தான் நடிக்க வைத்தனர். இருந்தாலும் எனக்கு படத்தில் நடிக்கவே பிடிக்காமல் போனது. அடுத்தடுத்த வாய்ப்பு வரும் என நினைத்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால், ஹீரோயினாக இருந்த நான் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக மாறினேன். இதுதான் நான் எடுத்த தப்பான முடிவு.

வீரம் பட கதையில் ஏமாற்றம்

இதன் பிறகு பெரிதாக வாய்ப்பு வராத சமயத்தில் நான் பரதநாட்டியம், வீணை எல்லாம் கற்றுக்கொண்டேன். அப்போது தான் என்னைத் தேடி வீரம் பட வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தில் தமன்னா இறந்துவிடுவார்கள். அதற்கு அடுத்த கதாநாயகியாக நீங்கள் தான் இருப்பீர்கள் என சொல்லி தான் நடிக்க அழைத்தனர். அதை நம்பி தான் சென்றேன். ஆனால், அங்கு போனதற்கு பின் தான் தெரிந்தது என்னிடம் கூறியது போலத் தான் எல்லோரிடமும் சொல்லி இருக்கிறார்கள் என்று.

ஏகப்பட்ட பிரச்சனை

அதுமட்டுமின்றி, மேக்கப் போடக்கூடாது, நான் நினைத்த காஸ்ட்டியூம்கள் போடக்கூடாது என ஏகப்பட்ட பிரச்சனை. எப்போ ஷீட் நடக்கும் நடக்காது என்றே தெரியாது. எல்லாரும் செட்டில் ஜாலியாக இருந்தாலும் என்னால் அப்படி இருக்க முடியாமல் கேரவனில் அமர்ந்து அழுது கொண்டிருப்பேன்.

ஒரு நடிகர் சின்ன கேரட்டர், அல்லது கிராமத்து பெண் கேரக்டரில் நடித்தால் தொடர்ந்து எல்லா படத்திலும் அதே கேரக்டரில் நடிக்கத் தான் கூப்பிடுகிறார்கள். அதனாலேயே எனக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை போய் விட்டது. அதனால் சினிமாவில் இருந்து வெளியேறலாம் என்ற எண்ணமும் தோன்றியது" எனக் கூறி இருக்கிறார். இவரது இந்த பேட்டி தான் இப்போது வைரலாகி உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.