Thalapathy 69: 2k கிட்ஸ்களை குறிவைத்த தளபதி 69.. இதயத்தை பத்திரமா பாத்துக்கோங்க! வெளியான அடுத்த அப்டேட்
Thalapathy 69: தளபதி 69 படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில், பிரேமலு பட நாயகி நடிப்பதாக கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை தெரிவித்தபோது தமிழ் சினிமாவில் இருந்து முழுவதுமாக ஒதுங்கப்போவதாக அறிவித்தார். அப்போது இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் தனது 69வது படமே தனது கடைசி படம். அதன்பின் முழு நேர அரசியலில் ஈடுபட போவதாகவும் நடிப்பதில் இருந்து முவுவதுமாக விலகுவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விஜய்யின் 69 ஆவது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததது
ரசிகர்கள் ஹாப்பி
இந்நிலையில் நடிகர் விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்புகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்போது படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் என்றும் படத்திற்கு அனிருத் இசை அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தத் தகவல் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் பெரும்பான்மையான பார்வையாளர்களுக்கு திரைப்படம் பிடித்திருப்பதால், படத்தின் வசூல் 500 கோடியை தாண்டி மெகாஹிட் அடித்திருக்கிறது.
நட்சத்திர இயக்குநரான ஹெச்.வினோத்
சதுரங்கவேட்டை’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான ஹெச்.வினோத், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கியதின் மூலம் கவனம் மிகு இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து அஜித்தின் ‘நேர் கொண்ட பார்வை’ ‘வலிமை’ ‘துணிவு’ உள்ளிட்ட படங்களை இயக்கி நட்சத்திர இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தார்.
விஜய் அடுத்ததாக அரசியலுக்கு செல்ல இருப்பதால் இந்தப்படம் அரசியல் படமாக இருக்குமா என்ற கேள்விக்கு, இந்தப்படம் முழுக்க முழுக்க விஜயின் படமாக இருக்குமென்று ஹெச்.வினோத் கூறியிருந்தார்.
தளபதி 69 அப்டேட்
இந்நிலையில் தளபதி 69 படத்தின் அப்டேட்களை படக்குழு வெளியிடத் தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கப்போகும் நடிகர் நடிகைகள் யார் யார் என்று நேற்று முதல் அப்டேட் வெளியிடத் தொடங்கிய படக்குழு, பாலிவுட் பிரபலம் பாபி டியோல் தளபதி 69 படத்தில் களமிறங்குவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
இதையடுத்து இன்று படத்தில் நடிக்கும் மற்றோரு பிரபலம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, தளபதி 69 படத்தில், பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக் குத்து பாடலுக்கு பூஜா ஹெக்டேவும் விஜய்யும் ஆடியது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், படத்தில் நடிக்கும் மற்றொரு நபர் குறித்த அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, பிரேமலு திரைப்படம் மூலம் மலையாள ரசிகர்கள் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்களையும் இழுத்த 2கே கிட்ஸ்களின் க்ரஷ் ஆன மமிதா பைஜூ நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரேமலு திரப்படத்தில் மமிதா பைஜூவின் நடிப்பால் ஈர்க்கப்பட்ட பலரும் அவரைப் போல உடைகள் அணிவதையும், முடியை அலங்கரிப்பதிலும் அக்கறை காட்டி வந்தனர். இவர் இந்தப் படத்தில் என்ன செய்யப்போகிறார் என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் பேமிலி ஆடியன்ஸால் அதிகம் விரும்பப்படும் விஜய், தன் படத்தில் பெரும்பாலான ரசிகர்களையும் கவர் செய்யும் விதமாகவே நடித்து வருகிறார். இதனால் தான், இவரது படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் பெரியவர்களுடன் சேர்த்து இளம் தலைமுறையினரால் ரசிக்கப்படும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டடு வருகிறது என தகவல்கள் உலா வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.