Actress Malavika On Thiruttu Payale: ‘திருட்டு பயலே சர்ச்சை காட்சி;அந்த சீன்ல அப்பாஸ் இல்லாம வேற யாராவது..’- மாளவிகா
Actress Malavika On Thiruttu Payale: ’திருட்டுப் பயலே திரைப்படத்தில் எனக்கு வில்லி போன்ற கதாபாத்திரம் கிடைத்திருந்தது. நான் அந்த கேரக்டரை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று நடித்தேன்’ என்று நடிகை மாளவிகா கூறியுள்ளார்.

திருட்டுப்பயலே திரைப்படத்தில் அப்பாஸ் உடன் நெருக்கமாக நடித்த காட்சி குறித்து மாளவிகா பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
நிம்மதியாக வேலை செய்தேன்:
இது குறித்து அவர் பேசும் போது, “ என்னை பொருத்தவரை சினிமாவில் நான் யாருடனும், அசெளகரியமாக உணர்ந்தது கிடையாது. உண்மையில் தமிழ் நடிகர்கள் மிகச் சிறந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். ரஜினி,கமல்,விஜய்,அஜித், சூர்யா என எல்லோரிடமும் எனக்கு நல்ல ஒரு சௌகரியமான சூழ்நிலையே நிலவியது. நான் மிகவும் நிம்மதியாக அவர்களுடன் வேலை செய்தேன்.
அதனால், எனக்கு தமிழ் சினிமாவில் அசெளகரியம் தரக்கூடிய எந்த ஒரு மோசமான அனுபவமும் நிகழவில்லை. நான் என்னுடைய கேரியரில் இரண்டு படங்களுக்கு மிகவும், ஆவலாகவும் சந்தோஷமாகவும், படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறேன். ஒன்று கார்த்திக் சாருடன் நடித்த லவ்லி திரைப்படம். இன்னொன்று அப்பாஸூடன் நடித்த திருட்டுப் பயலே.
மிகவும் சௌகரியமாக நடித்திருக்க முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான்:
திருட்டுப் பயலே திரைப்படத்தில், எனக்கு வில்லி போன்ற கதாபாத்திரம் கிடைத்திருந்தது. நான் அந்த கேரக்டரை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று நடித்தேன். அந்தப் படத்தில் அப்பாஸூடன் நான் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய காட்சி ஒன்று வரும். அந்த காட்சியில் நான் மிகவும் சௌகரியமாக நடித்தேன்.
காரணம் என்னவென்றால், அப்பாஸ் என்னுடைய நெருங்கிய நண்பர். அந்த இடத்தில் வேறு எந்த கதாநாயகன் இருந்தாலும், என்னால் அவருடன் நடித்தது போன்று, மிகவும் சௌகரியமாக நடித்திருக்க முடியுமா என்றால், அது கேள்விக்குறிதான். நானும் அம்பாஸூம் முன்பிருந்தே நன்றாக பழகி வந்திருந்தோம். இரண்டு பேரும் நிறைய பார்ட்டிகளில் சந்தித்து இருக்கிறோம்.
அதில் ஒரு வரம்பே இல்லாமல் இருக்கிறது:
இன்று நெருக்கமான காட்சிகள் மிகவும் இயல்பாக படங்களில் இடம் பெறுகின்றன. ஓடிடியில் சென்சார் போர்டு என்ற ஒன்று கிடையாது. அதனால் அவர்கள் எல்லா விதமான படங்களையும் அப்பட்டமாக காண்பிக்கிறார்கள்.
அதில் ஒரு வரம்பே இல்லாமல் இருக்கிறது. அத்துடன் மோசமான வார்த்தைகளும் அதில் இடம்பெறுகின்றன. ஆனால் இதுவெல்லாம் அப்போது பெரிதாக கிடையாது. இப்போது இருக்கும் அளவிற்கு அப்போது நெருக்கமான காட்சிகளும் படத்தில் இடம் பெறவில்லை.” என்று பேசினார்.
முன்னதாக, கிளாமரான பாடல்கள் குறித்தும் அதை தேர்ந்தெடுத்து ஆடுவது குறித்தும் நடிகை தமன்னா பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
இது குறித்து அண்மையில் அவர் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு முறை, ஒரு பேட்டியில் நடிகர்கள் என்பவர்கள் நல்ல ஆடைகளை உடுத்தி வேலை செய்யும் வேலை ஆட்கள்” என்று கூறியிருந்தேன். அதைப்பற்றி நீங்கள் தற்போது கேட்கிறீர்கள்.
இந்த துறையில் இருந்து கிடைக்கும் பணம், புகழ்,கிளாமர் என எல்லாமும் பிடிக்கும். இதையெல்லாம் பிடிக்காது என்று சொன்னால் அது நியாயமாக இருக்காது. நான் இருக்கும் இடமானது எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுக்கக் கூடிய இடமாக இருக்கிறது.
இந்த துறையின் மேற்பரப்பானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது வேறு மாறியாக இருக்கும். நீங்கள் இந்த துறையில் பார்வையாளர்களுக்கு மிகவும் சவாலான ஒரு விஷயத்தை, கடினமாக உழைத்து கொடுப்பீர்கள்.
ஆனால் அதை பார்க்கும் பொழுது எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் செய்தது போல இருக்கும். இது உண்மையில் ஒரு பணியாளரின் மனநிலையில் இருந்து செய்யக்கூடிய வேலைதான். இதை நிகழ்த்துவதற்கு மனதளவில், எமோஷனல் அளவில், உடல் அளவில் கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் நான் அப்படி சொன்னேன்.
கிளாமரான பாடலைப் பற்றிய பார்வையானது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவை கிளாமரை கொண்டாடும் செயல்முறை தான். பெண்களும் இந்த மாதிரியான ஒரு பார்வையை எடுத்து வர வேண்டும். அந்த பாடலில் இருக்கக்கூடிய சில விஷயங்கள் மிகவும் கீழ்த்தரமானவையாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அது ஒரு கொண்டாட்டம் அவ்வளவே!
பெண்ணானவள் மிக மிக அழகானவள். ஆகையால், அந்த மாதிரியான கிளாமர் பாடல்கள் கொண்டாடப்பட வேண்டும். இதன்மூலம் மக்களுடன் எனக்கு பெரிய கனெக்சன் உண்டாகிறது ஒரு சிறிய குழந்தை கூட அந்த பாடலைக் கேட்டு ஆடுகிறது. இதுதான் ஒரு நடிகராக,ஒரு நடன கலைஞராக என்னுடைய வேலை என்று நினைக்கிறேன்.
தன் எதிரே இருக்கக்கூடிய மனிதரின் மகிழ்ச்சியை வெளியே கொண்டு வர வேண்டும். இது போன்ற பாடல்களை நான் தொடர்ந்து செய்ய போகிறேன்.” என்று பேசினார்
முன்னதாக பாலிவுட் நடிகர் விக்ரம் வர்மா உடனான காதல் குறித்து பேசிய தமன்னா, “லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில்தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம். அதன் பின்னர் தான் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என சொல்ல முடியாது.
ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டியது அவசியம். அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மாதான் என என்னால் உணர முடிந்தது. சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் பார்த்தேன். அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறி இருக்கிறார்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்