சினிமா ஹீரோக்களிடம் 'போலி' பெண்ணியம்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மாளவிகா மோகனன்..
தங்களை பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ஹீரோக்கள் எல்லாம் முகமூடி அணிந்துள்ளனர் என்று நடிகை மாளவிகா மோகனன் காட்டமாக பேசியுள்ளார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவிக்கும் கருத்துகளால் அதிகம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறார். சமீபத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் தொப்புளைக் காட்ட தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அதை பெரிதாக்கி புகைப்படங்களைப் பார்க்கிறார்கள் என்று அவர் அதிர்ச்சி தரும் கருத்துக்களை தெரிவித்தார்.
வேரூன்றிய ஆணாதிக்கம்
இப்போது மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இம்முறை பெண்ணியம் குறித்த தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட மாளவிகா மோகனன், சினிமா துறையில் ஆணாதிக்கம் வேரூன்றியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தங்களை பெண்ணியவாதிகளாக முன்னிறுத்தி படங்களில் நடிக்கும் நடிகர்களையும் அவர் விமர்சித்து அவர்கள் எப்படி முகமூடி அணிந்துள்ளனர் என்பது தனக்குத் தெரியும் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.