"ஒரு பக்கம் 3 வயசு மகன்... இன்னொருபக்கம் லோன் ஆம்பளைக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.." - மாளவிகா அவினாஷ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  "ஒரு பக்கம் 3 வயசு மகன்... இன்னொருபக்கம் லோன் ஆம்பளைக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.." - மாளவிகா அவினாஷ்

"ஒரு பக்கம் 3 வயசு மகன்... இன்னொருபக்கம் லோன் ஆம்பளைக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.." - மாளவிகா அவினாஷ்

Kalyani Pandiyan S HT Tamil
Published Dec 13, 2024 12:43 PM IST

வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு அது நன்றாக தெரியும். என்னுடைய அப்பாதான் இவ்வளவு பெரிய இடத்தை வாங்கி போடச்சொன்னார். - மாளவிகா அவினாஷ்

எடுபிடி வேலைக்கு யாருமே... ஒரு பக்கம் 3 வயசு மகன்... இன்னொருபக்கம் லோன் 

ஆம்பளைக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.." - மாளவிகா அவினாஷ்
எடுபிடி வேலைக்கு யாருமே... ஒரு பக்கம் 3 வயசு மகன்... இன்னொருபக்கம் லோன் ஆம்பளைக்கு அதெல்லாம் சுட்டு போட்டாலும் வராது.." - மாளவிகா அவினாஷ்

கே ஜி எஃப் 3 உள்ளிட்ட பல படங்களின் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா அவினாஷ், வீடு கட்டிய கதையை கலாட்டா பின் யூடியூப் சேனலுக்கு பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் பேசும் பொழுது, "சினிமா வாழ்க்கை நிரந்தரமானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையானது முற்றிலும் வேறானது.

அப்போது நமக்கெல்லாம் இப்படி கொரோனா தொற்று வரப்போகிறது. அந்த சமயத்தில் நம் பாக்கெட்டில் ஒரு பைசா இருக்காது என்பதெல்லாம் தெரியாது. ஆனால் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு அது நன்றாக தெரியும். என்னுடைய அப்பாதான் இவ்வளவு பெரிய இடத்தை வாங்கி போடச்சொன்னார்.

உடன்பாடே கிடையாது. 

என்னுடைய கணவர் அவினாசிக்கி இதில் சுத்தமாக உடன்பாடே கிடையாது. அவர் சிறிதாக ஒரு பிளாட்டில் இருந்து விடலாமே என்று கூறினார். ஆனால், என்னுடைய அப்பா கடைசி வரை விடவே இல்லை. நிச்சயமாக இடம் வாங்கி தான் வீடு கட்ட வேண்டும் என்று கூறிவிட்டார்.

நான் பேங்கில் லோன் கேட்டுச் சென்றால், நான் நடிகை என்று லோன் தர மறுத்தார்கள். அப்போது, என்னுடைய அப்பா வங்கியில் பணிபுரிந்து வந்தார். அதன் பேரில் தான் எனக்கு லோன் கொடுக்கப்பட்டது. எப்போதுமே சரி நீங்கள் சம்பாதிக்கும் பணம் 5 லட்சம் என்றால்,.நீங்கள் கட்டும் வீடு 10 லட்சமாக இருக்கும்.

நீங்கள் 10 லட்சம் சம்பாதித்தீர்கள் என்றால், நீங்கள் கட்டும் வீடானது 20 லட்சமாக இருக்கும். நமக்கு பிடித்த வீட்டை கட்ட வேண்டும் என்றால், நாம் இப்படியான முறையில் தான் கட்டியாக வேண்டும்.

நீங்கள் 10 லட்சம்

பாதிதான் வீட்டைக் கட்டியிருப்போம். அதற்குள் நமது லோன் பணம் முழுவதும் செலவழிந்து விடும். அதன் பின்னர் நண்பர்களிடம், உறவினர்களிடம் கடன் வாங்கி தான் வீட்டை கட்டுவோம். எல்லோருமே அப்படித்தான் கட்டியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் வீட்டைக் கட்டினேன். 

இந்த வீட்டில் பெரியவர்கள் மூன்று பேர் இருக்கிறோம். என்னுடைய பையனும் உடன் இருக்கிறான். ஆனால் வீடு அவ்வளவு பெரியது. இந்த வீட்டை கட்டும்பொழுது நான் என்னோட அப்பாவிடம் இந்த வீட்டை யார் சுத்தம் செய்வது என்று கேட்டு சண்டை போட்டேன். இப்போதெல்லாம் எடுபிடி வேலைக்கு என்று யாரும் வருவதில்லை எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விட்டார்கள்.

ஆனால் அவர் இந்த வீட்டில் தான் நான் சாகப் போகிறேன் என்றார். அதேபோல வீடு கட்டி இந்த வீட்டில் தான் அவர் இறந்தார்.

நான் அந்த வீட்டை கட்டும் பொழுது இதனுடையactress malavika avinash latest interview about how she struggled her own house ஆர்க்கிடெக்கைஅடிக்காத குறை தான் அவ்வளவு கேள்விகள் கேட்பேன்.

8 மாதம் ஆனது.

நீங்கள் வீடு கட்டுகிறீர்கள் என்றால்,.தினமும் அந்த இடத்திற்கு வர வேண்டும் இல்லையென்றால் அவன் நீங்கள் செங்கல் வைக்க சொன்ன இடத்திற்கு மாற்றாக இன்னொரு இடத்தில் அதை வைத்து விட்டு சென்று விடுவான். இந்த வீட்டை கட்டும் பொழுது கிட்டத்தட்ட 8 மாதம் ஆனது. ஒவ்வொரு நாளும் நான் இந்த சைட்டில் வந்து நின்றேன். அப்போது என்னுடைய பையனுக்கு மூன்று வயது. அவனையும் சமாளிக்க வேண்டும்; இந்த வீட்டு வேலைகளையும் பார்க்க வேண்டும். இரு வேலைகளையும் கண்ணும் கருத்துமாக பார்த்தேன். இதுபோன்ற பலதரப்பட்ட வேலைகளை பெண்களால் தான் பார்க்க முடியும். ஆண்களுக்கு அது சுட்டு போட்டாலும் வராது. " என்று பேசினார்.