Actress Madhoo: பாறையிலேயே உறக்கம், வெட்ட வெளியில் உடை மாற்றிய தருணம்! ஷுட்டிங்கில் நடந்த தர்மசங்கடம் - நடிகை மதுபாலா
நான் சினிமாவில் நடித்த காலகட்டத்தில் ஷுட்டிங்கில் பல்வேறு தர்மசங்கட நிகழ்வுகள் நடந்துள்ளன. வெட்ட வெளியில் உடை மாற்றிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தற்போது மாறியிருப்பது வரவேற்க தகுந்த விஷயம் என்று நடிகை மதுபாலா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90ஸ்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மதுபாலா. பாலச்சந்தர் இயக்கிய அழகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுமானார்.
இதைத்தொடர்ந்து இந்தி, மலையாள சினிமாக்களில் நடித்த மதுபாலா, மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் டைட்டில் கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார்.
இதையடுத்து 1990களின் காலகட்டத்தில் படப்பிடிப்பின்போது நடிகைகளுக்கு ஏற்பட்ட சில தர்மசங்கடமான நிகழ்வுகள் குறித்தும், தற்போது நடிகைகளுக்கு செளகரியமான சூழல் உருவாகியிருப்பது குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகை மதுபாலா பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, " தமிழ் சினிமாக்களில் நடித்த ஆரம்பகாலத்தில் மலைபகுதிகளிலும், குகைகளிலும், மர நிழல்களிலும் அமர்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவையெல்லாம் மிகவும் சங்கடம் ஏற்படுத்துவதாக அமைந்தன.
டான்ஸ் காட்சிகாக நாங்கள் அணியும் காஸ்ட்யூம் வெட்டவெளியில் மாற்றிக்கொள்ளும் நிலையும் ஏற்படும். யாராவது உடை மாற்றுவதை பார்க்கிறார்களா என்றெல்லாம் கவனிக்க முடியாது. இது மிகவும் கடினமான விஷயமாகவே இருந்தது.
மணிரத்னத்தின் இருவர் படத்தில் நடித்தபோது, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் படமாக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு பாறையிலேயே குட்டி தூக்கம் தூங்கியுள்ளேன்.
அப்போது, இவ்வளவு பணம் சம்பாதித்து என்ன பயன். பாறையில் படுத்து தூங்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது என யாரோ சொன்னது கூட காதில் விழுந்தது.
தற்போது நடிகைகளுக்கு இதுபோன்ற தர்மசங்கடமான சூழ்நிலை எதுவும் ஏற்படாமல் இருக்கிறது. இந்த மாற்றம் வரவேற்புக்குரியது தான்"
இவ்வாறு அவர் கூறினார்.
இருவர் படத்தில் மதுபாலா
மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றத்தில் தோன்றியிருப்பார் மதுபாலா. நறுமுகையே என்ற அந்த பாடல் சூப்பர் ஹிட்டானது, சிறந்த பாடலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பாடல் காட்சியில் மோகன்லாலுடன் இணைந்து தோன்றும் மதுபாலா, பரதாநாட்டியம் ஆட்டத்தில் கலக்கியிருப்பார். பாடல் காட்சிகள் அருவி பின்னணியில் இயற்கை அழகு எழில் கொஞ்சும் லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும்.
மதுபாலா கம்பேக்
தமிழில் 1997இல் வெளிவந்த இருவர் படத்தின் நறுமுகையே பாடல் காட்சியில் தோன்றிய பின்னர், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் 17 ஆண்டுகள் கழித்து 2014இல் வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.
அதன் பின்னர் 5 ஆண்டு இடைவெளிக்குப்பின் 2019இல் அக்னிதேவி, காலேஜ் குமார், தலைவி, தேஜாவு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.
தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
டிவி மற்றும் வெப் சீரிஸில் மதுபாலா
தமிழில் 2001இல் ஒளிபரப்பான காவேரி, 2012இல் செளந்தரவள்ளி போன்ற டிவி சிரீயல்களில் நடித்தார். சமீபத்தில் அமேசான் ப்ரைமில் வெளியான ஸ்வீட் காரம் காபி என்ற வெப் சீரிஸில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதுதவிர வேறு சில வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்