Lijomol jose: ‘ஒரு வார்த்தை கூட பேச முடியல.. பிளாங் ஆயிட்டேன்.. இந்தப்படம் நல்ல புரிதல கொடுக்கும்’ -லிஜோமோல் பேச்சு
Lijomol jose: ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன். - லிஜோமோல் பேச்சு

Lijomol jose: வினீத் , ரோகிணி , லிஜோமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், எடிட்டர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்த படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும்சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசுகையில், "ஜெய் பீம் படத்திற்கு விகடன் அவார்ட் கிடைச்சது. சசி சார் அந்த நிகழ்வில் இருந்தார். நான் மேடையில் ஏறும்போது, சசி சாரைப் பத்திப் பேசணும்னு நினைச்சேன். அங்க போனதும் நான் டோட்டலா பிளாங்க் ஆயிட்டேன்.
ஒரு வார்த்தை கூட பேசல
என்னால் ஒரு வார்த்தை கூடப் பேச முடில. அன்னிக்கு நான் ரொம்ப வருத்தப்பட்டேன். ஏன்னா, என் ஃபர்ஸ்ட் தமிழ்ப்படத்தைப் பத்திப் பேசாம ஜெய்பீம் பத்தி என்னால கண்டிப்பா பேச முடியாது. அதனால் இன்னிக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார்.
நாங்க ரொம்பப் பெருமையா, சந்தோஷமா, காதல் என்பது பொதுவுடைமை படத்தை உங்க முன்னாடி கொண்டு வர்றோம். ஓரிரு நாளுல, இந்தப் படம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு நாங்க நம்பலை. ஆனா, நிச்சயம் நம்மைச் சுத்தியிருக்கிறவங்களைப் பத்தி நல்ல புரிதல் ஏற்படுங்கிறதை நாங்க நம்புறோம். அதைத்தான் இந்தப் படத்தோட வெற்றியா பார்க்கிறோம். அனுபவம் வாய்ந்த நடிகர்களான வினீத் சார், ரோகிணி மேம் கூட நடிக்கக் கிடைச்ச வாய்ப்பை ஆசிர்வாதமாக கருதுறேன்.’ என்று பேசினார்.
நடிகர் மணிகண்டன் பேசுகையில். ‘நான் இந்த படத்தை பார்க்கவில்லை. அதனால் இந்த படத்தை குறித்து என்னால் தெளிவாக பேச முடியாது. ஆனால் இந்த படத்தில் பணி புரிந்த எனது நண்பர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள்.
இயக்குநர் ஜெயபிரகாஷ் தன்னுடைய கொள்கையில் அதீத பிடிப்போடு இருப்பவர். அவருக்கு திரைப்பட விழாவில் வெளியிடும் படத்திற்கும், சாதாரணமாக வெளியிடப்படும் கமர்ஷியல் திரைப்படத்திற்கும் இடையில் உள்ள இடை வெளியை, சரி செய்ய நினைத்து கோபத்துடன் இதனை எடுத்துள்ளார்.
அதேபோல செங்கனி இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவர் ஜெய் பீம் படத்தில் நடிக்கும் போது டப்பிங் செய்வதற்கு அடிக்கடி நான் அழைப்பேன். தயங்காமல் வந்து செல்வார்கள். மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்