Actress Lakshmi: 'தூங்கி எழுந்து பாத்தா இப்படி இருக்கு.. கண்ணாடியில தேடுறேன்'- பல ஆண்டு ரகசித்தை உடைத்த நடிகை லட்சுமி
Actress Lakshmi: பல ஆண்டுகளாக தான் ஏன் முடி வளர்க்காமல் இருக்கிறேன் என்ற ரகசியத்தை நடிகை லட்சுமி சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Actress Lakshmi: பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து இப்போது எடுக்கும் படம் வரை தன் நடிப்பால் அசத்தி வருகிறார் நடிகை லட்சுமி. இவரது பெற்றோர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் இவரும் நடிப்பில் ஆர்வம் காட்டினார்.
நடிகை லட்சுமி
இவர் நடிப்பது மட்டுமின்றி, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, படங்களை தயாரிப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தன் திரைப்படங்களில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். லட்சுமியைப் போன்றே அவரது மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை லட்சுமி பல ஆண்டுகளாக தன் முடியை வளர்க்காமல் இருந்து வருகிறார். அதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவள் விகடன் யூடியூப் சேனலுக்கு அவர் சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பிடிவாதம் பண்ண கணவர்
அந்தப் பேட்டியில், "என்னோட ஹேர் ஸ்டைல் டாம் பாய் கட் மாதிரி இருக்க ஒரு காரணமும் இருக்கு. எனக்கு எப்பவும் ரொம்ப நீளமான முடி இருக்கும். 1994 டைம்ல நான் சொல்றது எல்லாம் நடக்குது. நான் நீளமா முடி வச்சிருக்கிறது என் வீட்டுக்காரருக்கு பிடிக்கல. எப்பா பாரு ஜடை போடுவ, இல்லன்னா தூக்கி கொண்டை போடுவ. எப்போ பாரு நீள முடி வச்சிருக்க. எதாவது முடி வெட்டு, இல்லன்னா ஹேர் ஸ்டைல் பண்ணுன்னு சொல்லிட்டே இருக்காரு.
டைம் வேஸ்ட் பண்ண பிடிக்கல
ஆனா, நான் முடி வெட்ட மாட்டேன்னு சொல்றேன். என்னோட முடி நேரா இருக்குமா அத வெட்டுனாலும் எதுவும் தெரியாது. அதுக்காக பார்லர் போயி டைம் வேஸ்ட் பண்ணவும் எனக்கு விருப்பம் இல்ல. நான் எல்லாம் பேஷியல் கூட பண்ணனுது இல்ல. அது தேவை இல்லன்னு இல்ல. என்னால ஒரே இடத்துல உக்காந்து, டைம் வேஸ்ட் பண்ண பிடிக்கல. கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் விடும்மா உனக்கு வேற வேலை இல்லன்னு வந்துடுவேன்.
தூங்கி எழுந்து பாத்தா இப்படி இருக்கு
இருந்தாலும் என் வீட்டுக்காரர், நீ முடிய வச்சிட்டு ரொம்ப கஷ்டப்படுற, முடிய பின்னி, பூ வச்சு இதெல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டே இருந்தாரு. அப்புறம் என்னோட ஹேர் ஸ்டைலிடஸ் கிட்ட சொன்னதும், நான் உனக்கு ரொம்ப அழகா கட் பண்ணி விடுறேன்னு சொன்னாரு.
அவரு அப்படியே மசாஜ் பண்ணுனதும் நான் தூங்கிட்டேன். அப்புறம் கண்ண முழிச்சு பாத்தா லட்சுமி எங்கன்னு தேடுறேன். பாத்தா இந்த டாம் பாய் கட்டிங்ல இருக்கேன். இது எனக்கு ரொம்ப கம்போர்ட்டா இருந்தது. மெட்ராஸ் வெயிலுக்கு முடிய வச்சிட்டு கசகசன்னு இருந்த நான் இப்போ ரொம்ப ஃபிரியா ஃபீல் பண்ணேன். எனக்கு சைனஸ் பிரச்சன வேற இருந்தது. அதுல அந்த அவ்ளோ நீள முடிய வச்சிட்டு தலைக்கு குளிக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கும்.
கணவருக்கு ரொம்ப பிடிச்சது
ஆனா இப்போ அதெல்லாம் இல்ல. அதவிட ரொம்ப முக்கியம் என் கணவருக்கு இந்த ஹேர் ஸ்டைல் ரொம்ப பிடிச்சது. அவரு ரசிச்சாரு. அதுனால அப்போ இருந்து இந்த ஹேர் ஸ்டைல் தான். இந்த கட்டிங் பண்ணுன கொஞ்ச நாள்லயே ஜீன்ஸ் படத்துக்காக அமெரிக்கா போக வேண்டி இருந்தது. இப்போ இந்த ஹேர் ஸ்டைல் வச்சே 25 வருஷம் கிட்ட ஆகிடுச்சு.
இப்போ இந்த ஹேர் ஸ்டைல் பழகிட்டு மத்த கேரக்டருக்கு விக் வச்சா தான் கஷ்டம். அந்த கேரக்டரா நடிச்சிட்டு விக்க கழட்டினா தான் நான் நானா இருப்பேன்ங்குற மாதிரி ஆச்சு" என்று தன் ஹேர் ஸ்டைலின் ரகசியத்தை சொல்கிறார் நடிகை லட்சுமி.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்