குஷ்பு கல்யாணத்தில் தேம்பி தேம்பி அழுத கார்த்திக்.. காலில் விழுந்து சம்பவம் செய்த குஷ்பு
நடிகை குஷ்பு தன் காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்தும், கல்யாண மேடையில் நடிகர் கார்த்திக் செய்த சம்பவம் குறித்தும் பேசியுள்ள வீடியோ வைரலாகியுள்ளது.
தனது 15வது வயதில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பூ. மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமிழில் 1989ம் ஆண்டு வெளியான வருஷம் 16 எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிட்சையமானார்.
கோயில் கட்டி கொண்டாடப்பட்ட நடிகை
தன் அழகாலும், வசீகரத்தாலும், குழந்தைத் தனமான நடிப்பாலும் மக்கள் மனம் கவர்ந்த குஷ்பு, தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கி வந்திருப்பார்.
இவர் மீதுள்ள பாசத்தால், 80, 90களின் காலகட்டத்தில் ரசிகர்கள் குஷ்புவிற்கு கோயில் கட்டினர். இது தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
அப்படி இந்தியாவையே திரும்பிப் பார்த்தவரை, திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் சுந்தர்.சி.
குஷ்புவின் முறைமாமனான சுந்தர்.சி
தற்போது தமிழ் சினிமாத்துறையில் சிறந்த இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக பல்துறைகளில் சிறந்து விளங்கிவரும் சுந்தர்.சி இயக்கிய முதல் படம் தான் முறைமாமன். இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான இவர்களது நட்பு காலம் செல்ல செல்ல காதலாக மாறியது.
பின், இவர்கள் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, குஷ்புவும் சினிமா, தயாரிப்பு, அரசியல் என பலத்துறைகளில் சிறப்பாக விளங்கி வருகிறார்.
இந்நிலையில், குஷ்பு தன் காதல், திருமணம் குறித்து பிஹைண்ட் உட்ஸ் யூடியூப் சேனலுக்காக கலா மாஸ்டர் எடுத்த பேட்டியில் பேசியிருப்பார்.
காதலுக்கு தூது போன கார்த்திக்
அந்தப் பேட்டியில், தனது நெருங்கிய நண்பரான நடிகர் கார்த்திக் தான் எங்கள் காதலுக்கான பாலமாக இருந்தார் எனக் குறிப்பிட்டார். நாங்கள் காதலிக்கும் போது நடக்கும் சண்டைகள் அனைத்தையும் அவர் தான் தீர்த்து வைப்பார். நானும் சுந்தர்.சியும் காதலித்தை முதன் முதலில் கார்த்திக்கிடம் தான் கூறினோம். அவர் தான் எங்களை முதலில் மனதார வாழ்த்தினார் எனக் கூறினார்.
தேம்பித் தேம்பி அழுத கார்த்திக்
பின், குடும்பத்தினர் சம்மதத்துடன் கல்யாண ஏற்பாடுகள் நடந்தது. அப்போது அங்கு வந்த கார்த்திக்கிடம் நாங்கள் இருவரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினோம். அப்போது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கார்த்திக் தேம்பி தேம்பி அழுதார். பின், வீட்டிற்கு போன பின்பும் அவர், அதை மறக்க முடியாமல் போன் போட்டு அழுதார் எனக் கூறியுள்ளார்.
அம்மாவுக்கு நன்றி சொன்ன சுந்தர்.சி
மேலும், நாங்கள் காதலிக்கும் சமயத்தில் கோயம்புத்தூரில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் இயக்குநர் மணிரத்னத்தின் மிகப்பெரிய ரசிகர்கள். அந்த சமயத்தில் தான் பாம்பாய் படம் ரிலீஸ் ஆனது. அந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என அனைவரும் முடிவு செய்து பொள்ளாச்சிக்கு போக தயாரானோம். அப்போது, என் அம்மாவிடமும் படத்திற்கு வருகிறீர்களா எனக் கேட்டோம். அவர் வரவில்லை எனக் கூறிவிட்டார். அப்போது, நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்த சமயத்தில் சுந்தர்.சி என் அம்மாவிடம் சென்று படத்திற்கு வராமல் இருந்ததற்கு நன்றி எனக் கூறிவிட்டு வந்துள்ளார்.
கையை விடாமல் பிடித்திருக்கும் சுந்தர்.சி
பின், நாங்கள் எல்லோரும் தியேட்டருக்கு செல்ல முயன்றபோது, படம் ஆரம்பித்த பிறகு நான் உள்ளே சென்றால் போதுமானது. இல்லையென்றால் ரசிகர்கள் எல்லோரும் உங்களை சுற்றி வந்து விடுவார்கள் என தியேட்டர் ஓனர் கூறினார். இதனால், அவர் கூறியது போலவே நானும் படம் ஆரம்பித்த பின்னரே தியேட்டருக்குள் சென்றேன்.
ஆனால், இன்டர்வல் சமயத்தில் நான் தியேட்டருக்கு வந்தது ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. பின் அவர்கள் யாரையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த சமயத்தில் சுந்தர்.சி என் கையை பிடித்து பத்திரமாக அழைத்துச் சென்றார். அதன்பின் இப்போது வரை என் கையை விடவே இல்லை என மிக அழகாக அவரது காதல் கதையை விளக்கினார்.
இதனை ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து குஷ்பு சுந்தர்.சி ஜோடியை கொண்டாடி வருகின்றனர்.
டாபிக்ஸ்