தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Krithika Annamalai Latest Interview About Her Divorce

Krithika Annamalai: குழந்தை பிறந்த 2 மாதங்களில் தற்கொலை; எவ்வளவு நாள் பொறுத்து போறது - கிருத்திகா விவாகரத்து கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 04, 2024 07:15 AM IST

இதற்கிடையே அவருக்கு பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் பண விஷயத்திலேயே எங்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவானது. ஒரு கட்டத்தில் அவர் வீட்டில் உட்கார வேண்டிய நிலை உருவானது. இதனால் கல்யாணம் முடிந்து மூன்று வருடம் கழித்து, நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

நடிகர் கிருத்திகா பேட்டி!
நடிகர் கிருத்திகா பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

அதனால் குழந்தை பெற்றுக் கொள்வதை ஒரு வருடம் தள்ளி போடலாம் என்று சொன்னேன்.ஆனால் இரு வீட்டு தரப்பும் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை;ஒரு வருடத்தில் மகனும் பிறந்தான். அவன் பிறந்த மூன்று மாதத்திலேயே, எனக்கும் கணவருக்கு இடையே பிரச்சினை அதிகரிக்க தொடங்கிவிட்டது. 

இதற்கிடையே அவருக்கு பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இதனால் பண விஷயத்திலேயே எங்கள் இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் உருவானது. ஒரு கட்டத்தில் அவர் வீட்டில் உட்கார வேண்டிய நிலை உருவானது. இதனால் கல்யாணம் முடிந்து மூன்று வருடம் கழித்து, நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை.

ஆண்கள் வீட்டில் இருந்து பெண்கள் வேலைக்கு செல்லும் சூழ்நிலை இருந்தால் அது சரியாக இருக்காது. இருதரப்பு வீட்டிற்கும் பிரச்சினை மூண்டது. அது பெரிய பிரச்சினையாக வெடித்தது. எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் ஓரளவிற்கு தானே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியும். 

அம்மாவும் கணவர் இல்லாமல் வாழ்ந்ததால், பெண்ணும் அப்படி ஆகிவிட்டாள் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருந்ததால், கணவருக்கும் எனக்கு நடந்த பிரச்சினையை, என்னுடைய வீட்டில் நான் சொல்லவில்லை. 

ஆனால் ஒரு கட்டத்தில் சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.  அதைக் கேட்ட என்னுடைய அம்மா என்னை திட்டியதோடு மட்டுமில்லாமல், இதை ஆரம்பித்திலேயே முடித்திருக்க வேண்டும் என்று சொன்னார். 

காரணம் என்னவென்றால், குழந்தை பிறந்து இரண்டு மாதங்களில் நான் தற்கொலைக்கு முயற்சி செய்து 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். இருந்தாலும் நான் அனுசரித்து நடந்து கொள்கிறேன் என்று சொல்லி அவருடன் நான்கு வருடங்கள் வாழ்ந்தேன். என்னால் நீடிக்க முடியவில்லை இதனையடுத்து தான் நான் விவகாரத்து செய்து கொண்டேன்” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.