ஆபாச வீடியோ லீக்.. “என்ஜாய் பண்ணுங்க”… “வீடியோவ பாலியல் கல்விக்கு” -ஓவியா கமெண்டிற்கு பதில் கொடுத்த நடிகை கொற்றவை!
ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் ஓவியா கொடுத்த கமெண்ட்டிற்கு பதில் கொடுத்து இருக்கிறார் நடிகை கொற்றவை!

தன்னுடைய ஆபாச வீடியோவிற்கு ஓவியா பதிலடி கொடுத்தது குறித்து, நடிகை கொற்றவை பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து நடிகை கொற்றவை தன்னுடைய எக்ஸ் தளத்தில், கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியை பகிர்ந்து இருக்கிறார்.
5 yrs ago agonized by Pollachi Sexual exploitation & blackmail harassment I issued this statement, if anyone leaks your private video, tell them “use it for #sexeducati̇on . #kotravai empowers women #Oviya Adipoli 🙌🏾👏🏾 pic.twitter.com/ay4M4o8gx2
— Kotravai (கொற்றவை) (@kotravai_n) October 13, 2024
அதில் அவர் பேசும் போது," கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக, பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலின் போது, பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பொதுவெளியில் வெளியாவது குறித்து பேசினேன். அதில், என் உடலை யாராவது இப்படி மறைந்து இருந்து படம் படித்து சமூக வலை தளங்களில் உலவ விட்டால் அல்லது தனிப்பட்ட உறவை வைத்திருப்பதை வெளியானால், தயவு செய்து அதனை பாலியல் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்ற மனநிலைக்கு பெண்கள் தயாராகி இருக்கிறோம் என்றேன். இப்போது அதுவே பிரதிபலித்து இருக்கிறது” என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, தமிழ், மலையாள மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இந்நிலையில், அண்மையில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலாகி, இந்திய அளவில் இவர் ட்ரெண்ட் செய்யப்பட்ட நிலையில், எதற்கும் சளைக்காமல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
மறுப்பு தெரிவிக்காத ஓவியா
அந்தப் பதிவில் கமெண்ட் செய்த பலர், அந்தரங்க வீடியோ குறித்து நக்கலாக கூறி வந்தனர். பின் ஓவியாவிடம் தொடர்ந்து அதுகுறித்து பேசினர். இதற்கிடையில், அந்த வீடியோவில் உள்ளது தான் இல்லை என விளக்கமளிப்பார் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில், அவர் வித்தியாசமாக அந்த கேலிகளையும் கிண்டல்களையும் கையாண்டு பதிலளித்து அனைவரையும் திகைக்க வைத்தார்.
ஆம், வழக்கமாக ஒருவரின் அந்தரங்க புகைப்படமோ, வீடியோவை சோசியல் மீடியாவில் வெளிவந்தால், முதலில் அதை மறுக்கத்தான் செய்வார்கள். அதன் பின்னரே, அந்த வீடியோ குறித்தும், அது எப்படி வெளியானது என்பது குறித்தும் விளக்கமளிப்பர். ஆனால், நடிகை ஓவியா அனைவரிலிருந்தும் வேறுபட்டு பதிலளித்தார்.
கூலாக ஹேண்டில் செய்த ஓவியா
ஓவியாவின் போட்டோவிற்கு கமெண்ட் செய்த நபர் ஒருவர், ஓவியாவின் 17 வினாடி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது எனக் குறிப்பிட்டிருந்தார். இதைக் கண்ட ஓவியா, அவரிடம் என்ஜாய் என பதில் அளித்து, மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பின், வேறொருவர் வெளியான வீடியோவின் நீளம் மிகவும் குறைவாக உள்ளது. அதிக நேரம் உள்ள வீடியோ கிடைக்குமா என கேள்வி எழுப்பி இருந்தார். அதைக் கண்டு கோபமடைந்து ஓவியா பதிலளிப்பார் என எதிர்பார்த்தால், அடுத்த முறை ப்ரோ என கூலாக பதிலளித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், எமோஜிக்கள் அனுப்பிய மற்றொரு நபரிடம், வீடியோவின் லிங்க் இருக்கிறதா எனவும் கேட்டார்.
ஓவியாவுக்கு ஆதரவு குரல்
இந்த விஷயத்தில் நடிகை ஓவியா இப்படி நடந்துகொள்வார் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், அவர் சளைக்காமல் தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துவருகிறார். இவரின் இந்த செயலை பலரும் ஆச்சரியமாக பாராட்டி வருகின்றனர். ஒரு இக்கட்டான சூழலில் அவர் பிரச்சினையை கையாண்ட விதத்தை பலரும் பாராட்டி, அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தும் வருகின்றனர்.
களவாணி ஓவியா
தமிழ் சினிமாவில் நடிகர் விமலின் ஜோடியாக களவானி படத்தில் நடித்து, தனது அப்பாவித்தனமான முகத்தால் மக்கள் மனதில் அமர்ந்தவர் ஓவியா. தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினாவில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.
பின்னர், அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் படியான படங்கள் அமையாததால், கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.பின், நடிகர் கதிருக்கு ஜோடியாக மதயானைக் கூட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். தொடர்ந்து அவர், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.
பிக்பாஸ் நட்சத்திரம்
இதற்கு இடையில் தான், விஜய் டிவி நடத்திவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் ஓவியா. அங்கு அவர் பேசிய விஷயங்களும், அவரின் நடவடிக்கைகளும், அவரின் என்ணங்களும் மக்களுக்கு பிடித்துப்போக இவர் மீண்டும், மக்கள் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். அவருக்காக ஆர்மியும் உருவாக்கப்பட்டது.