தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Kotravai: ‘எவ்வளவு டாக்சிக்… எப்படி இப்படியெல்லாம்… அவங்களுக்கும் சேர்த்துதான் பேசுறோம்’ - கொற்றவை!

Actress kotravai: ‘எவ்வளவு டாக்சிக்… எப்படி இப்படியெல்லாம்… அவங்களுக்கும் சேர்த்துதான் பேசுறோம்’ - கொற்றவை!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 14, 2024 07:05 AM IST

உண்மையில் அந்த படத்தில் கதாநாயகன் பெண்ணை நடத்தும் விதத்தை மக்கள் எப்படி இப்படி கொண்டாடினார்கள் என்பது தெரியவில்லை. இதை நாம் பேசும் பொழுது, அதில் நடித்தவரும் ஒரு பெண் தானே, அவர் அதை தெரிந்து கொண்டுதானே நடித்தார் என்று கேட்கிறார்கள்.

நடிகை கொற்றவை பேட்டி!
நடிகை கொற்றவை பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அவர் அவள் கிளிட்ஸ் சேனலுக்கு அவர் பேசும் போது, “ஒரு ஆண் முரட்டுத்தனமாக இருப்பதை பெருமைக்குரிய விஷயமாக காட்டுவது. அதேபோல முரட்டுத்தனமாக ஒரு பெண் இருந்தால் அவரை அடக்கும் ஆணே, உண்மையான ஆண்மகன் என்பது போல காட்டுவது போன்ற காட்சிகள் அடங்கிய படங்களே நமக்கு இங்கு முன்னோடி படங்களாக இருந்து இருக்கின்றன. 

உண்மையில் என்னை பொறுத்தவரை அனிமல் டாக்சிக் நிறைந்த திரைப்படம் ஆகும். எதற்கெடுத்தாலும் இந்த டாக்சிக் என்ற பெயரை பயன்படுத்துகிறீர்களே என்று கேட்கிறார்கள். அது எவ்வளவு முக்கியமான வார்த்தை தெரியுமா?

உண்மையில் அந்த படத்தில் கதாநாயகன் பெண்ணை நடத்தும் விதத்தை மக்கள் எப்படி இப்படி கொண்டாடினார்கள் என்பது தெரியவில்லை. இதை நாம் பேசும் பொழுது, அதில் நடித்தவரும் ஒரு பெண் தானே, அவர் அதை தெரிந்து கொண்டுதானே நடித்தார் என்று கேட்கிறார்கள். 

ஆனால் இங்கு அந்த பெண்ணுக்கும் சேர்த்து தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு இது குறித்தான விழிப்புணர்வு இல்லை. அவர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களில் பெண்கள் பக்கம் இருக்கலாம். 

ஆனால் இது, அவர்களது தொழிலாக மாறிவிடுகிறது. வெறுமனே அவர்கள் அந்த படத்தில் நடித்து விட்டார்கள் என்பதற்காகவே, நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. இந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்கு உங்களை நாடி வந்தால், ஏன் நீங்கள் அதை ஒத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். இந்த இடத்தில் அவர்களையும் நாம் குறை சொல்ல முடியாது.

தொழில் என்று வரும் பொழுது, அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அவர்களுக்கும் சேர்த்து நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. 

இந்த இடத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்களை கேள்வி எழுப்புவதையே! அதாவது அந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் கதாநாயகன் இந்த மூன்று பேரிடம் நாம் கேள்விகளை முன்வைக்க வேண்டும்” என்று பேசினார். 

 

முன்னதாக, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் அனிமல்.

இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆன நிலையிலும், படத்தில் ஆணாதிக்கம் நிறைந்து காணப்படுவதாக எழுந்த சர்ச்சை, இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பான கேள்விகள், படத்தின் இயக்குநர், நடிகர்கள் என பலரிடம் முன்வைக்கப்பட்டது.

அந்த வரிசையில், தற்போது இது தொடர்பான கேள்வி அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவிடமும் வைக்கப்பட்டது.

இது குறித்து பேசிய அவர், “ படத்தில் ரன்பீரின் கபூர் கதாபாத்திரத்திற்கு ஒரு விதமான பிரச்சினை இருக்கும். அந்த கதாபாத்திரம், அவரின் தந்தைக்காக எந்த எல்லைக்கும் செல்லும். படப்பிடிப்பு நடக்கும் போது, அது மட்டுமே என்னுடைய மனதில் இருந்தது. அதற்காக யாரும், எதனையும் செய்ய முடியாது. அது ஒரு கதை அவ்வளவே.

எந்த வித சாயமும் பூசாமல், உண்மையாக, சரியாக ஒரு படம் வேண்டும் என்றால் அது அனிமலாக இருக்கும். படத்தை பார்த்த பிறகு படம் பெண் வெறுப்பை பேசுகிறது அல்லது வேறு எதையாவது பேசுகிறது என்று, எதை வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், உண்மையாக படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை ரசித்து கடந்து சென்று விடுங்கள்” என்று பேசினார்.

மேலும் அவரிடம், படத்தின் இறுதியில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா விவாதம் செய்யும் காட்சி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “பெண்களின் உடலை வைத்து ட்ரோல் செய்யும் மக்களை எனக்கு பிடிக்காது. நான் பேசும் வசனங்களையோ அல்லது வேறு எதையாவது வைத்து நீங்கள் ட்ரோல் செய்தால், அதை நான் ஏற்றுக்கொள்வேன்.

படப்பிடிப்பில் அந்த காட்சி எடுக்கப்படும் போது, செட்டில் இருந்த அனைவருக்கும் அந்த காட்சி பிடித்திருந்தது. ஆனால், ட்ரெய்லர் வெளியே வந்த உடன், நான் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டேன். ஆனால் படம் வெளிவந்த பின்னர், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு அந்த காட்சி பிடித்திருந்தது. அதை பார்த்த போது, என்னுடைய உள்ளுணர்வு சரியாக இருந்ததை உணர்ந்தேன்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்