‘கோலங்கள்’ ஆனந்தியா இது? -எங்க போச்சு உங்க அழகு கூந்தல்.. காரணத்தை ஓப்பனாக போட்டு உடைத்த நடிகை மஞ்சரி
நடிகை மஞ்சரி தனக்கு முடி போன கதை குறித்தும், ‘கோலங்கள்’ சீரியலில் இருந்து விலகிய காரணம் குறித்தும் பேசி இருக்கிறார்
தமிழ் சீரியல்களில் இன்று கிளாசிக்காக பார்க்கப்படும் சீரியல் கோலங்கள். நடிகை தேவயானி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த சீரியலில் ஆனந்தி கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் தேவயாணியின் தங்கையாக நடித்திருந்தவர் நடிகை மஞ்சரி. அந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் பெருமளவு பேசப்பட்டது. அதே போல ‘அண்ணாமலை’ சீரியலில் அவர் ஏற்று நடித்த நெகட்டிவ் கதாபாத்திரமும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்தார்.
முடி எங்கே போனது?
அந்த பேட்டியில் அவர், “ ‘சில்ட்ரன் கேன்சர் சொசைட்டி’ என்ற ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் குழந்தைகள் அனைவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள். அதற்கான சிகிச்சையில் அவர்கள் ஈடுபடும் பொழுது, அவர்களது முடி அனைத்தும் உதிர்ந்து விடும். அதனால் தங்களுக்கு முடி இல்லையே என்று அவர்கள் வருத்தப்படுவார்கள்.
அவர்களுக்காகவே நிறைய பேர் தங்களது முடியை தானமாக கொடுப்பார்கள். அங்கு கொடுக்கப்படும் முடியானது விக்காக செய்யப்பட்டு அவர்களுக்கு கொடுக்கப்படும். அந்த சேவைக்காகத்தான் நான் என்னுடைய முடியை கொடுத்து இருக்கிறேன்.
கடவுளிடமும் ஒரு வேண்டுதல்
கூடுதலாக, எனக்கும் கடவுளிடமும் ஒரு வேண்டுதல் இருந்தது. அந்த வேண்டுதலின்படி கடவுளிடம், உங்களுக்கு இந்த முடியை கொடுப்பதை விட, கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த முடியை நான் கொடுக்கிறேன். கோயிலில் கொடுப்படும் முடியானது குப்பைத் தொட்டிக்குதான் செல்லும். அதுவே அவர்களிடம் கொடுத்தால், அது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக மாறும் என்று கூறி கொடுத்து விட்டேன்.
‘கோலங்கள்’ சீரியலில் இருந்து வெளியேறியது ஏன்?
‘கோலங்கள்’ சீரியலில் நான் நடித்துக் கொண்டிருந்த போதுதான் நான் கர்ப்பமானேன். இதனால், என்னுடைய வயிறு பெரிதாகிக் கொண்டு சென்றது. முடிந்த அளவு நடிக்க முயன்றேன். ஆனால் ஒரு கட்டத்தில் முடியவில்லை. பயணமும் செய்ய முடியவில்லை. இதனால் சீரியலில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
ஆனால், நான் சென்ற பிறகு அந்த சீரியல் ரசிகர்கள் அனைவரும் மஞ்சரி எங்கே சென்றார். அவரை மீண்டும் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால் எனக்கு குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் கழிந்த உடனேயே, ‘கோலங்கள்’ சீரியல் டைரக்டர், தேவயானி மேம் உள்ளிட்ட அனைவரும் சீக்கிரமாக சீரியலுக்கு திரும்பி வா ரசிகர்களை சமாளிக்க முடியவில்லை என்று சொன்னார்கள்.
நான் திரும்பே சென்றவுடன் செட்டே ஜாலியாக மாறிவிட்டது. ‘அண்ணாமலை’ சீரியலில் நான் நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் என்னை மேலும் பிரபலமாக்கியது. பொது நிகழ்ச்சிக்கு ஏதாவது சென்றால், நான் அந்த கேரக்டரில் உண்மையாக நடிக்கிறேன் என்று நினைத்து, சேரை தூக்கி எறிந்தார்கள். அது என்னுடைய மண்டையில் வந்து விழுந்தது.” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்