Actress Kiran: ‘கிளாமரா போட்டோ போட்ட படுக்க வரணுமா..? இரவெல்லாம் போன் ஒரே கால்ஸ்; வில்லன் கிரண் வேதனை!
என்னுடைய காதல் மோசமான நிலைக்கு சென்று விட்டது. டாக்ஸிக்காக மாறிவிட்டது. இதனால் நான் அந்த உறவில் இருந்து வெளியே வர முடிவு செய்தேன். மீண்டும் சென்னைக்கு வந்தேன்.

பிரபல நடிகையான கிரண் தன்னுடைய வாழ்க்கையின் கருப்பு பக்கத்தை அண்மையில் கலாட்டா சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “நான் என்னுடைய காதலனை கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவுடன்,படங்களில் நடிப்பதை நிறுத்தினேன். இவ்வளவு ஏன்?..அஜித் படத்தில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு வந்தது.
ஆனால் அதையும் நான் நிராகரித்தேன். காரணம் நான் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்து இருந்தேன். ஆனால் என்னுடைய காதல் மோசமான நிலைக்கு சென்று விட்டது. டாக்ஸிக்காக மாறிவிட்டது. இதனால் நான் அந்த உறவில் இருந்து வெளியே வர முடிவு செய்தேன். மீண்டும் சென்னைக்கு வந்தேன்.
தொடர்ந்து படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்கி கொண்டிருந்தேன். அதற்காக முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தேன். அப்போது மொத்த சினிமா துறையுமே எனக்கு நண்பர்கள் போல தெரிந்தது.
எல்லோரும் நிச்சயமாக உங்களுக்கு நல்ல கதாபாத்திரங்களை கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். அதிக அக்கறை எடுத்துக் கொள்வது போல நடந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் பேசிய அன்றைய தினம் இரவு ஃபோன் செய்வார்கள். என்னை படுக்கைக்கு அழைப்பார்கள்.
அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். இந்த சினிமா துறையில் நண்பர்கள் என்று யாருமே கிடையாது என்று. இன்று வரை யாரும் எனக்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை.
கொரோனா சமயத்தில் மொத்தமாக உலகம் முடங்கிய போது, என்னுடைய ஆப்பை நான் தொடங்கினேன். அதில் என்னுடைய கிளாமரான போட்டோக்கள், வீடியோக்களை பதிவு செய்தேன்.
அதைப்பார்த்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எல்லோரும் என்னை படுக்க அழைத்தார்கள். விசாரித்து பார்த்தால், என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் கிளாமரான போட்டோக்களை, வீடியோக்களை பதிவு செய்கிறேன். அதனால் அப்படி நினைக்கிறார்கள் என்று தெரிய வந்தது.
ஆனால் நிறைய நடிகைகள் இதை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களது கண் என் மீது தான் இருக்கிறது. நான் ஒன்னும் ஆபாச படத்தில் நடிக்கவில்லையே.. எனக்கு பிடித்த ஆடைகளை உடுத்தி நான் வீடியோக்களை பதிவிடுகிறேன். இது எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது” என்று பேசினார்.

டாபிக்ஸ்