மருத்துவமனையில் கியாரா அத்வானி? ஷங்கர் பட நாயகிக்கு என்ன ஆனது? தீயாய் பரவும் தகவல்..
கேம் சேஞ்சர் படத்தின் கதாநாயகியான கியாரா அத்வானி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரமாண்டமாக வரும் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தின் விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்காத கியாரா அத்வானி
இதையடுத்து இந்த படத்தின் பிரமாண்ட வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 4) மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நடிகை கியாரா அத்வானி பங்கேற்கவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கியாரா அத்வானியின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பினர்,
கியாரா அத்வானிக்கு என்ன ஆச்சு?
மும்பையில் நடைபெற்ற தனது கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் கியாரா கலந்து கொள்ளவிருந்தார். ஆனால், அவர் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அப்போது, பட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தொகுப்பாளர் கியாரா அத்வானிக்கு உடல்நிலை சரி இல்லாததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.