மணிரத்னம் சாரின் பெரிய மனதுக்கு நன்றி.. மகளை நினைத்து நெகிழ்ந்த நடிகை குஷ்பு.. குவியும் வாழ்த்து மழை
கமல்ஹாசன் நடித்த 'தக் லைஃப்' படத்தில், மகள் அனந்திதா உதவி இயக்குநராகப் பணியாற்றியதற்காக இயக்குநர் மணிரத்னத்திற்கு நடிகை குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தக் லைஃப் பட வெளியீட்டிற்கு பின்னர் இயக்குநர் மணிரத்னத்திற்கு தனது மனமுவர்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் புகைப்படத்தோடு வெளியிட்டு விளக்கியுள்ளார். அந்தப் பதிவில் நடிகை குஷ்பு, " தங்களது மகள் அனந்திதா சுந்தர், கமல்ஹாசன் நடித்த மணிரத்னத்தின் 'தக் லைஃப்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில் பெருமிதம் கொண்டுள்ளதாக கூரியுள்ளார்.
பெற்றோராக பெருமைபடும் குஷ்பு
குஷ்பு தனது இன்ஸ்டாகிராமில், மகள் அனந்திதா சிறிது காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் கால்முறிவு காரணமாக பணியை விட்டு விலகிய போதிலும், அவரது பெயர் படத்தின் கடைசி காட்சிகளில் இடம்பெற்றதற்கு மணிரத்னத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 'தக் லைஃப்' படத்தின் கடைசி காட்சிகளின் படத்தை பகிர்ந்து, "ஒரு பெற்றோராக, என் மகளின் பெயர் மணிரத்னம் படத்தில் அவரது சீடராக இடம்பெற்றுள்ளதைப் பார்த்து எனக்கு மிகுந்த பெருமை என்றார்.