Khushbu Sundar: என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும்.. கண்ணு வச்சிடாதீங்க.. கண்ணில் சந்தோஷம் பொங்க பேசிய குஷ்பு
Khushbu Sundar: மதகஜராஜா படத்திற்கு கிடைத்த வரவேற்பால் என் வீட்டுக்காரருக்கு திருஷ்டி சுத்தி போடனும். வேற என்னங்க சொல்றது என கண்ணில் சந்தோஷம் பொங்க பேசியுள்ளார் நடிகை குஷ்பு.

Khushbu Sundar: சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல் திரைப்படம் மதகஜராஜா. இந்தப் படம் பல பிரச்சனைகளில் சிக்கி வெளியாகாமலே போனது. இருந்தாலும் இந்தப் படத்தில் விஷால் பாடிய மை டியர் லவ்வரு பாடல் வெளியான சமயத்தில் இருந்தே மெகா ஹிட் ஆனது.
வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், நிதின் சத்யா, மணிவண்ணன், மயில்சாமி, மனோபாலா உள்ளிட்டோர் நடித்த இந்தத் திரைப்படம் தயாரிப்பாளர் தரப்பிற்கு ஏற்பட்ட பிரச்சனையால் வெளிவராமலே இருந்தது.
12 ஆண்டுக்கு பின் வைப் ஏற்றிய படம்
இருப்பினும் இந்தப் படத்திற்கும், விஷால் பாடிய பாடலுக்கும் வைப் நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்தது. இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இதனால், 12 வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த மதகஜராஜா படம் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.