Khushbu: 'எனக்கு பிடிக்கும்ன்னு விஜயகாந்த் இதெல்லாம் செய்வாரு.. அவர மாதிரி யாராலையும் முடியாது..' சிலாகித்த குஷ்பு
Khushbu: ஷூட்டிங் டைம்ல விஜயகாந்த் தனக்காக செய்தவற்றை எல்லாம் குஷ்பூ பூரிப்புடன் பேசியுள்ளார்.

Khushbu: தென்னிந்தியாவில் நடிகை குஷ்பு என்ற பெயரைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். குஷ்பு சுந்தர் 1980 களில் இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். இவர் 90 களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நட்சத்திரமாக புகழ் பெற்றார். இதையடுத்து அவர் இயக்குநரும் நடிகருமான சுந்தர். சியை திருமணம் செய்து கொண்டு நடிப்பிலும் குடும்ப வாழ்க்கையிலும்பிஸியானார்.
பிஸியாக மாறிய குஷ்பு
பின், திரைப்படங்களைத் தயாரிப்பது, நடிப்பது மட்டுமல்லாமல் அரசியல் வாழ்க்கையிலும் மிகவும் பிரபலமாகவும் பிஸியாகவும் இருந்து வருகிறார் குஷ்பு. இந்நிலையில்அவர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்காக கலா மாஸ்டர் எடுத்த நேர்காணல் ஒன்றில் பேசி இருப்பார்.
அந்தப் பேட்டியில், விஜயகாந்த் உடன் இருந்த அனுபவம் குறித்தும் அவர் பேசியத வைரலாகியுள்ளது. அதில், வீரம் வெளஞ்ச மண்ணு படப்பிடிப்பு தளத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை கூறியிருப்பார்.
பிரேக் இருக்காது
கஸ்தூரி ராஜா தான் இந்தப் படத்துக்கு டைரக்டர். அவரோட படத்துல பிரேக்கே இருக்காது. நாங்க எல்லாம் லொக்கேஷன்ல உக்காந்துட்டு இருப்போம். அவரு அவசர அவசரமா எல்லா ஷூட்டிங்கையும் எடுத்துட்டு இருப்பாரு.
அதுனால யாருக்கு ஷூட் இல்லையோ அவங்க போய் சாப்பிட்டு வரணும். அப்போ விஜயகாந்த் சார அவரு சாப்பிட அனுப்பிடுவாரு. என்ன மட்டும் வச்சி ஷூட் பண்ணிட்டு இருப்பாரு.
எனக்காக சாப்பிடாம இருப்பாரு
எனக்கு முட்டையோட மஞ்ச கருன்னா ரொம்ப பிடிக்கும். அப்போ ஷூட்டிங்குக்கே முட்டை எல்லாம் வரும். அப்போ விஜயகாந்த் சார் என்ன பண்ணுவாருன்னா, அவருக்கு கொடுத்த முட்டைல இருந்து தனியா மஞ்ச கருவ மட்டும் எடுத்து வச்சிருப்பாரு. அவரோட இலைய பாத்தா வெறும் வெள்ள கரு மட்டும் தான் இருக்கும்.
உனக்கு தான பிடிக்கும்
நான் போய் சாப்பிட உக்காந்தா எனக்கு வெறும் மஞ்ச கருவா வரும். ஏய் குஷ்பு உனக்கு தான் எல்லாம் எடுத்து வச்சிருக்கேன் போய் சாப்பிடுன்னு சொல்லுவாரு.
அப்புறம் அவர்கிட்ட போய் கேட்டேன். ஏன் சார் என்ன இதெல்லாம்ன்னு கேப்பேன். அப்போ அவரு உனக்கு இது பிடிக்கும் தான போய் சாப்பிடுன்னு சொல்லுவாரு. என விஜயகாந்த்துடன் தனக்கு உள்ள மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
வீரம் வெளஞ்ச மண்ணு
1998ம் ஆண்டு இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வீரம் வெளஞ்ச மண்ணு. இந்தப் படத்தில் விஜயகாந்த், குஷ்பு, ரோஜா, மனோரமா, மணிவண்ணன், ராதாரவி உள்ளிட்டோர் நடித்தனர். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இப்படத்திற்கு தேவா இசையமைத்திருப்பார்.
மாநில விருது பெற்ற படம்
இப்படத்தின் பாடல்கள் நாட்டுப்புற கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும், வெகுஜன மக்கள் படத்தின் இறுதிக் காட்சிகளில் பரவசமடையச் செய்வதாகவும் இருப்பதாக விமர்சகர்கள் கூறி இருக்கின்றனர். சிறந்த ஒப்பனைக்காக இந்தப் படம் தமிழ்நாடு அரசிந் மாநில விருதைப் பெற்றது. இப்படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்