ஜீரோ கெமிஸ்ட்ரி.. ஜீரோ சப்போர்ட்.. குஷ்புவுக்கும் தனக்குமான காதலை கிண்டலாக சொல்லும் சுந்தர்.சி..
நடிகை குஷ்புவிற்கும் தனக்கும் உள்ள கெமிஸ்ட்ரி பற்றி நடிகரும் இயக்குநரும் குஷ்புவின் கணவருமான சுந்தர்.சி காமெடியாக விளக்கம் அளித்துள்ளார்.

ஜீரோ கெமிஸ்ட்ரி.. ஜீரோ சப்போர்ட்.. குஷ்புவுக்கும் தனக்குமான காதலை கிண்டலாக சொல்லும் சுந்தர்.சி..
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் மிகவும் புகழ்பெற்றவர்களில் ஒருவர் குஷ்பும்- சுந்தர்.சியும். இவர்கள் இருவரும் காதலித்து கரம் பிடித்து 25 ஆண்டு திருமண வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பின்னும் அவர்களது திரைப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். அத்துடன் திருமணத்திற்கு பின் குஷ்பு அரசியலிலும் சினிமா தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கேங்கர்ஸ் படம்
இந்த நிலையில், குஷ்பு மற்றும் சுந்தர்.சியின் அவ்னி தயாரிப்பு நிறுவனத்தின் பேனரின் கீழ் கேங்கர்ஸ் படம் வெளியானது. சுந்தர்.சி- வடிவேலு கூட்டணி பல ஆண்டுகளுக்கு பின் இணைந்திருக்கும் நிலையில் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வந்தது.