நடிகையின் வீடியோவைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்.. டாப் கியரில் செல்லும் வீடியோ! யாராக இருக்கும்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நடிகையின் வீடியோவைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்.. டாப் கியரில் செல்லும் வீடியோ! யாராக இருக்கும்?

நடிகையின் வீடியோவைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்.. டாப் கியரில் செல்லும் வீடியோ! யாராக இருக்கும்?

Malavica Natarajan HT Tamil
Oct 15, 2024 02:52 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான அஜித் குமார் கார் ரேஸில் பங்கேற்று வருவது போல், தேசிய விருது வாங்கிய நடிகை ஒருவரும் கார் ரேஸில் பங்கேற்று நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

நடிகையின் வீடியோவைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்.. டாப் கியரில் செல்லும் வீடியோ! யாராக இருக்கும்?
நடிகையின் வீடியோவைப் பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள்.. டாப் கியரில் செல்லும் வீடியோ! யாராக இருக்கும்?

மற்ற கார் ரேஸ் வீரர்களுடன் அமர்ந்து, நிபுணர்களின் அறிவுரையை கேட்பது, கார் பந்தயத்திற்கு தயாரவது, கார் பந்தய வீராங்கனைக்கான உடையுடன் வந்து ரேஸ் கார் ஓட்டியது, உணவகத்தில் சாப்பிடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷிற்குள் இப்படி ஒரு திறமையா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய சினிமாவில் கலக்கி வரும் நடிகைகளுள் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தனது அடுத்தடுத்த படங்களில் திறமையை மெருகேற்றிக் கொண்டே சென்று தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். அம்மா, அப்பா இருவருமே சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் என்பதால், இவர் குழந்தையாக இருந்த போதே நடிக்கத் தொடங்கியுள்ளார். பின் படிப்பை முடித்து மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

தமிழில் மாயம் செய்த கீர்த்தி

இதையடுத்து, இயக்குநர் ஏ.எல். விஜய்யின் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தொடர்ந்து, முன்னணி கதாநாயகர்களுடன் கைகோர்த்த அவர், சிவகார்த்திகேயன், விஜய், ரஜினியுடன் நடித்து தன்னை சினிமாவில் முக்கிய நடிகையாக முத்திரை பதித்துக் கொண்டார்.

தேசிய விருது

பின், தமிழ், மலையாளம் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகி இடத்தையும் தக்க வைத்தார். மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மகாநதியில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, அவர் தேசிய விருதையும் பெற்றார், பின் என்ன, சினிமாவில் இவருக்கு ஏறுமுகம் மட்டுமே இருந்தது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் தொடரந்து தனது பங்களிப்பை செலுத்தி வந்த இவர், தற்போது தான் நடிப்பில் மட்டும் சிறந்தவள் அல்ல, தனக்கு வேறு திறமைகளும் உள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.

கார் ரேஸர் ஆன கீர்த்தி

சில நாட்களுக்கு முன் அபுதாபியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு நடந்த கார் ரேஸ் ஒன்றிலும் பங்கேற்றுள்ளார். அது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.

மற்ற கார் ரேஸ் வீரர்களுடன் அமர்ந்து, நிபுணர்களின் அறிவுரையை கேட்பது, கார் பந்தயத்திற்கு தயாரவது, கார் பந்தய வீராங்கனைக்கான உடையுடன் வந்து ரேஸ் கார் ஓட்டியது, உணவகத்தில் சாப்பிடுவது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷிற்குள் இப்படி ஒரு திறமையா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் ரேஸர்கள்

ஏற்கனவே, தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் நடிகர் அஜித் குமார் பல ஆண்டுகளாக கார், பைக் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவருடன் நடித்த நடிகை மஞ்சு வாரியாரும் இப்போது பைக் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், நடிகர் ஜெய், நடிகை நிவேதா பெத்துராஜ் போன்றோரும் இதற்கு முன் கார் பந்தயத்தில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். இப்போது இந்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.