தாலியும் கழுத்துமாக வந்து நின்ற கீர்த்தி சுரேஷ்.. புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்ஸ்.. வைரலாகும் கீர்த்தி..
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி உள்ளன.

கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டில் என்பவரை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் அவர் நடித்த பேபி ஜான் படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பேபி ஜான் படத்தின் கிருத்துமஸ் நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் வருண் தவான், அட்லீ மற்றும் வாமிகா கப்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேபி ஜான் பட விழாவில் கீர்த்தி
சமீபத்தில், பேபி ஜான் படக்குழு படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் மும்பையில் கிறிஸ்துமஸ் விருந்துக்கு ஏற்பாடு செய்தது. புதுமணத் தம்பதியான கீர்த்தி சுரேஷ் தனது சக நடிகர்களான வருண் தவான் மற்றும் வாமிகா கப்பி ஆகியோருடன் இந்த நிகழ்ச்சியில் இணைந்தார். நடிகர் ஒரு சிவப்பு பாடிகான் உடை அணிந்து வந்த கீர்த்தி சுரேஷ் கழுத்தில் அவரது தாலியுடன் தோற்றமளித்தார். மறுபுறம், வருண் சிவப்பு ஜாக்கெட்டுடன் வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார், வாமிகா சிவப்பு லெதர் உடையில் காணப்பட்டார்.
பாரம்பரியத்தை கடைபிடிக்கும் கீர்த்தி
இதைக் கண்ட ரசிகர்கள், திருமணத்திற்கு பின் கீர்த்தி பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்கள் வைரலான நிலையில், நெட்டிசன் அவரது புகைப்படத்தை வைரலாக்கினர், அத்துடன் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின் பளபளப்பாக காணப்படுகிறார் என்று ஒருதரப்பும், தாலியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், அவர் பாரம்பரியத்தை பின்பற்றுபவர் என்றும் ஒரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.