தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Keerthy Suresh Apologized To Her Fan

Keerthy Suresh: மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்.. 234வது நாளில் நடந்த சம்பவம் - என்ன காரணம் தெரியுமா?

Karthikeyan S HT Tamil
Jan 25, 2024 10:36 AM IST

நடிகை கீர்த்தி சுரேஷின் ட்விட்டர் பதிவு சற்போது சமூகவலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனைத் தொடர்ந்து சில காலம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த சமயத்தில் தான் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான 'மகாநடி' படத்தில் நடித்தார். இந்தப்படம் கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் புதிய மைல்கல்லாக அமைந்தது. படம் பார்த்த அனைவருமே வியந்து போனார்கள். இதற்கு காரணம் அந்தப் படத்தில் சாவித்திரியாகவே மாறிவிட்டார் இல்லை சாவித்ரியாகவே வாழ்ந்தார் கீர்த்தி சுரேஷ் என்றே சொல்லலாம். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமடைந்தார்.

அதன் பின்னர் கோலிவுட்டில் இருந்து சற்றே ஒதுங்கி இருந்த கீர்த்தி மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து அவரது நடிப்பில் கடைசியாக 'போலா ஷங்கர்' வெளியானது. தற்போது 'சைரன்', 'ரகுதாத்தா', 'ரிவால்வர் ரீட்டா', 'கன்னிவெடி' ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளாா். வெளியாகவிருக்கின்றன.

இந்நிலையில் ரசிகர் ஒருவரிடம் நடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதாவது கீர்த்தியின் அதிதீவிர ரசிகர் ஒருவர் 233 நாட்களாக தொடர்ச்சியாக ட்வீட் செய்து கீர்த்தி சுரேஷ் ரிப்ளை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார். இந்த சூழலில் 234 ஆவது நாளில் அவரது ட்வீட்டை கவனித்த கீர்த்தி சுரேஷ், "234 ஃபேன்சி நம்பர். தாமதமாக ரிப்ளை செய்ததற்கு மன்னிக்கவும். நிறைய காதல்களுடன்" என்று பதிலளித்திருக்கிறார். இந்த பதிவை பார்த்த கீர்த்தியின் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷின் இந்த பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் வைராக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.