HTExclusive: அவங்களுக்கு பொறாமை.. ‘காத்தடிச்சா பறந்துருவன்னு… என் உடம்ப பத்தி எப்படியெல்லாம்..’ - கீர்த்தி பாண்டியன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Htexclusive: அவங்களுக்கு பொறாமை.. ‘காத்தடிச்சா பறந்துருவன்னு… என் உடம்ப பத்தி எப்படியெல்லாம்..’ - கீர்த்தி பாண்டியன்!

HTExclusive: அவங்களுக்கு பொறாமை.. ‘காத்தடிச்சா பறந்துருவன்னு… என் உடம்ப பத்தி எப்படியெல்லாம்..’ - கீர்த்தி பாண்டியன்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Dec 12, 2023 06:28 AM IST

எல்லாத்துக்கிட்டேயும் அன்பு காட்ற ஒரு மனிதர், பாசிட்டிவா இருக்குற மனிதர், யாரையும் அப்படி நினைக்க மாட்டார்கள். ஒரு வேளை எதிர்தரப்புல குறை இருந்தா கூட, அதை ஏத்துக்கிட்டு விட்ருவாங்க. - கீர்த்தி பாண்டியன்!

கீர்த்தி பாண்டியன் பேட்டி!
கீர்த்தி பாண்டியன் பேட்டி!

முதலில் உடைந்து நொறுங்கியவர், பின்னர் உலகை புரிந்து கொண்டு, தன்னைத்தானே காதலித்து எழுந்ததோடு மட்டுமல்லாமல், தான் ஆசைப்பட்டதையும் அடைந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 10 வருடங்களாக நடிகர் அசோக் செல்வனை காதலித்து வந்த இவர், அண்மையில் அவரை கரம்பிடித்தார். இவரது நடிப்பில், வருகிற டிசம்பர் 15ம் தேதி ‘கண்ணகி’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

அந்த படம் தொடர்பாகவும், அவரது சொந்த வாழ்க்கை தொடர்பாகவும் பல்வேறு விஷயங்களை ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்திற்கு பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவரிடம் அவரது ஒல்லியான தேகம் குறித்து பதிவிடப்படும் கமெண்டுகள் குறித்தான கேள்வி முன்வைக்கப்பட்டது.

இது குறித்து அவர் பேசும் போது, “ உங்கள நெகட்டிவா விமர்சிக்கிறவங்க ஏற்கனவே அவங்க வாழ்க்கையில ஏதாவது ஒரு வகையில, துன்பப்பட்டு இருந்திருப்பாங்க.. அதனாலத்தான் அவங்ககிட்ட இருந்து அப்படியான கமெண்டுகள் வருது.

இரண்டாவது விஷயம், ஏதாவது ஒரு வழியில நம்மள விட இன்னொருத்தர் பெட்டரா இருக்காங்களேன்னு பார்க்கும் போதும், அந்த பெட்டர்மெண்ட் அவங்க லைஃப்ல இல்லையேன்னும் ஏங்கும் போதும், அவங்க நெகட்டிவா பேச ஆரம்பிப்பாங்க

 

இந்த விஷயத்தில் அவங்களையும் நாம முழுக்க முழுக்க குறை சொல்லிட முடியாது. காரணம், அவங்களுக்கு வேறு சில அழுத்தங்கள் இருக்கும்.

கல்யாண சம்பந்தப்பட்ட விஷயத்துல, சில வீடுகள்ல திருமணம் தொடர்பான அழுத்தத்தை கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. ஆனா, மாப்ள பொண்ணு எதிர்பார்ப்புக்கு மாறா இருந்துருக்கும்.

ஆனா, அது அவங்கள ஏதோ ஒரு வகையில் அட்டாக் பண்ணி, நமக்கு அப்படி மாப்பிள இல்லையேன்னு தோன வச்சிருக்கும்.

 

எல்லாத்துக்கிட்டேயும் அன்பு காட்ற ஒரு மனிதர், பாசிட்டிவா இருக்குற மனிதர், யாரையும் அப்படி நினைக்க மாட்டாங்க. ஒரு வேளை எதிர்தரப்புல குறை இருந்தா கூட, அதை ஏத்துக்கிட்டு விட்ருவாங்க.

நானும், இந்த மாதிரி மத்தவங்கள எடை போடும் விஷயத்தை செஞ்சிருக்கேன். ஆனா, நான் கடந்த வந்த பயணம் மூலமா எனக்கு ஒரு புரிதல் வந்திருக்கு.நாம யாரையும் எடை போடக்கூடாது. அது தவறு!

பாடி ஷேமிங் பொருத்தவரைக்கும், அந்த விஷயத்துல, நம்மளோட மனச நாம ஒழுங்கா, பத்திரமா பார்த்துக்கணும். நாம் நிச்சயமா ஆரோக்கிமா இருக்கணும் அப்படிங்கிறதுல எனக்கு மாற்றுக்கருத்துல்ல. ஆனா, சில பேருக்கு உடம்புல சில பிரச்சினைகள் இருக்கலாம்.

அப்படி இருக்கும் போது, அவங்ககிட்ட போய் நீ ஒர்க் அவுட் செய்ன்னு அட்வைஸ் பண்ண முடியாது. காரணம், அவங்களோட பாடி கண்டிஷன் அப்படி!

நம்ம உடம்ப, நாம முதல்ல உண்மையா, மனசளவுல ஏத்துக்கணும். நாம ஹெல்தியா இருக்கோம் அப்படிங்கிறது நமக்கு மட்டும், உண்மையா தெரிஞ்சா போதும்.

சொல்றவங்க சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க.. குடும்ப நிகழ்ச்சில சொந்தக்காரங்க சிலர், என்ன ஃபேன் பக்கம் நிக்கதா... பறந்து போயிடுவன்னு... ஒரு நாள் வெறும் காத்து மட்டும்தான் வரும்னெல்லாம் பேசிருக்காங்க

எனக்கு ஒரு நொடி ஆகாது. அவங்க திரும்ப பாடி ஷேமிங் பண்றதுக்கு.. அப்படி பண்ணா, அவங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்” என்று பேசினார்.

முழு பேட்டி விரைவில்!