Actress Kayadu Lohar: சிம்புவுக்கு ஜோடியாகிறாரா கயாடு லோஹர்? தீயாய் பரவும் தகவல்.. வைப் செய்யும் ரசிகர்கள்..
Actress Kayadu Lohar: நடிகர் சிம்புவின் 49வது படத்தில் நடிகை கயாடு லோஹர் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

Actress Kayadu Lohar: டிராகன் படம் கொடுத்த ஹிட் மூலம் நடிகை கயாடு லோஹர், தமிழ், தெலுங்கு சினிமாவில் செனஅசேஷனல் நாயதியாக தற்போது வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த ஒரே படத்தின் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். சோசியல் மீடியா முழுவதும் கயாடு லோஹரின் புகைப்படங்களே சூழும் அளவிற்கு அவர் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமாகிவிட்டார்.
STR49ல் கயாடு லோஹர்
இந்த நிலையில், கயாடு லோஹர் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, கயாடு லோஹர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிவரும் STR49 படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சிம்புவுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க உள்ளதாகவும் இதுகுறித்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டு வந்தது.
கயாடு லோஹர் லைன் அப்
இந்த நிலையில் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் களமிறங்க உள்ளார் என தகவல்கள் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. முன்னதாக, கயாடு லோஹர் டிராகன் படத்தை தொடர்ந்து இதயம் முரளி படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்க உள்ளார்.
சிம்புவின் 49வது படத்தையும் ஆகாஷ் பாஸ்கரனின் டாந் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில், இந்தப் படத்திலும் கயாடு லோஹர் நாயகியாக நடிக்கிறார் என தகவல்கள் பரவி வருகின்றன,
எஸ்டிஆர் 49
சிலம்பரசன், தக் லைஃப் படத்திற்கு இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணைந்து தனது 49 வது படத்தில் நடிக்க உள்ளார். ராம்குமார் இதற்கு முன் பார்க்கிங் எனும் படத்தை இயக்கியிருந்தார். சிம்பு- ராம்குமார் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது சிலம்பரசனின் 49வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாகவும், அந்தப் படத்தில் நடிகர் சந்தானம் நடிக்க உள்ளதாகவும் பலரும் தகவல்களை பரப்பி வருகின்றன.
அதிகாரப்பூர்வ தகவல் இல்லை
ஆனால், இதுகுறித்து நடிகர்கள் தரப்பிலிருந்தோ, படக்குழு தரப்பில் இருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதற்குள்ளாக, இணையத்தில் எஸ்டிஆர்49 படத்தின் படப்பிடிப்பு காட்சிகளும் லீக் ஆகி உள்ளது என ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
எஸ்டிஆர் அடுத்த படங்கள்
சிலம்பரசன் தக் லைஃப் படத்திற்கு பின் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதையடுத்து, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடிக்க இருப்பதுடன் அந்தப் படத்தை அவரே தயாரிக்க உள்ளார். இதைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்திலும் நடிக்க இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
