Actress Kasthuri: வலதுசாரி ஆதரவாளர் நான்! விஜய் பற்றி கேள்விக்கு “கருத்து வேண்டாம்” - கஸ்தூரி பளிச் பதில்
நடிகர்கள் குறித்து அண்ணாமலை கருத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாக தெரிவித்திருக்கும் நடிகை கஸ்தூரி, நான் விஜய்யின் தீவிர ரசிகை. விஜய்க்கு வாழ்த்துகளையும் நம்பிக்கையும் மட்டும் தெரிவிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் கஸ்தூரி. திருமணத்துக்கு பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கிய கஸ்தூரி சமூக வலைத்தளங்களான டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் தற்போது மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
அவ்வப்போது இவரது கருத்துகள் சர்ச்சையை கிளப்பும் நிலையில், சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகவும் செய்துள்ளார். இதையடுத்து இந்து மக்கள் கட்சி
சார்பில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற தலைப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் கோவை சித்தபுதூரில் பொதுகூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "நான் பாஜக கட்சியின் உறுப்பினர் கிடையாது. வலது சாரி சிந்தனையாளர் மட்டுமே. எனது சிந்தனைக்கு பாஜக ஓரளவுக்கு சரியா இருக்கும் என்றார்.
அண்ணாமலை கருத்திலிருந்து மாறுபடுகிறேன்
தொடர்ந்து அவரிடம், நடிகர்களுக்கு நடிப்பது மட்டுமே தொழில். எல்லா பிரச்னைகளுக்கும் நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி கேட்டபோது, "அவரது கருத்தில் இருந்து வேறுபடுகிறேன். நடிகர் நடிகை என்று இல்லாமல் பொறுப்புள்ள குடிமகன், குடிமகளாக இருக்கும் யாராக இருந்தாலும் செய்திகளை விழிப்புணர்வுடன் அணுக வேண்டும். எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய தேவை யாருக்குமே இல்லை.
நடிகர்கள் என்றில்லாமல் முழு நேர அரசியல்வாதிகள் கூட எல்லாவற்றுக்கும் கருத்து கூற வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எத்தனையோ பேர் இந்த சினிமாவை பார்த்து நல்லா இருக்குன்னு பாராட்டுகிறார்கள். ஏன் முதலமைச்சர் கூட சினிமா விமர்சனங்களை முன் வைக்கிறார்.
அதற்காக யாரும் இப்படித்தான் இருக்கனும், இருக்கக்கூடாது என ரூல்ஸ் போட முடியாது. அரசியலில் நல்ல அனுபவமும், ஆர்வமும், ஓரளவு அரசியல் பார்வையும் இருப்பவர்கள் கண்டிப்பாக அரசியல் பற்றி பேச வேண்டும். எல்லாருமே அரசியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்."
தொடர்ந்து தளபதி விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் 50 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்துள்ளளது பற்றி கேள்வி எழுப்பியபோது, "நான் விஜய்யின் ரசிகை. அவருடைய படங்களுக்கு மிக பெரிய வெறியை என அனைவருக்கும் தெரியும். நடிகர்களின் கட்சிக்கு இத்தனை பேர் சேர்ந்திருக்கிறார்கள் என்கிற கேள்வியை என்னிடம் கேட்பதை தவிருங்கள்.
விஜய்க்கு வாழ்த்து
நடிகர் அரசியலில் நுழைவது பற்றி பேச வேண்டிய நிலைமையில் நாம் இல்லை. வரலாறு அப்படி உள்ளது. விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் கழித்துதான் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். அதற்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறதோ? நம்பிக்கை மட்டும் தெரிவிப்போம். கருத்து வேண்டாம்"
இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 1990களில் விஜய்காந்த், பிரபு, சத்யராஜ், பிரசாந்த், கார்த்திக் என பலருடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார் கஸ்தூரி. இந்தியன் படத்தில் கமல்ஹாசனின் மகளாக தோன்றி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாக்களிலும் நடித்துள்ளார். 2009இல் கம்பேக் கொடுத்த இவர் தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருவதுடன், தொடர்ச்சியாக அரசியல் தொடர்பான கருத்துகளை பேசி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்