kangana Ranaut: ஒத்த படத்துக்காக சொத்தை வித்த நடிகை! சுத்தி சுத்தி அடித்த துயரம்.. கங்கனா பகிர்ந்த சோகம்..
எமர்ஜென்சி திரைப்படத்தை மக்கள் பார்வைக்கு கொண்டும் வரும் முன் இத்தனை தடைகளையும் துயரத்தையும் சந்தேப்பேன் என நினைக்கவில்லை என நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தமிழில் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிக்கு பரிட்சையமானவர் கங்கனா ரணாவத். இவர் தன் அசைக்க முடியாத நடிப்புத் திறமையால் பாலிவுட்டின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவரானார்.
இயக்குநர் அவதாரம்
இதையடுத்து, படம் நடிப்பதுடன் அதனை இயக்கவும் எண்ணி, மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கியுள்ளார் கங்கனா. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாப்பாத்திரத்திலும் இவரே நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து வெகுநாட்கள் ஆகியும் தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால், திரைக்கு வராமலே இருந்தது. இதையடுத்து தற்போது பிரச்சனைகள் எல்லாம் சுமூகமாக முடிக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 17ம் தேதி எமர்ஜென்சி திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.