Kangana : மீறுபவர்கள் சுடப்படுவீர்கள்.. நடிகை கங்கனா வீட்டின் அறிவிப்பு பலகை!
Kangana Ranaut: நடிகை கங்கனா வீட்டின் வெளியே வைத்துள்ள அறிவிப்பு பலகை மிரட்டும் வகையில் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரணாவத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர் இப்படத்தில் வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், ரவி மரியா, ஸ்ருஷ்டி டாங்கே, டி.எம்.கார்த்திக் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். சமீபத்தில் 'ஆர்ஆர்ஆர்' படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்ற எம்எம் கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் தனது பார்ட் ஷூட்டிங்கை நடிகை கங்கனா முடித்து இருக்கிறார். ராகவா லாரன்ஸுடன் தான் இருக்கும் சில படங்களைப் பகிர்ந்து கொண்டார் கனகனா ரணாவத். அதில், " சந்திரமுகி படத்தில் எனது பாத்திரத்தை இன்று முடித்து இருக்கிறேன். நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் விடைபெறுவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது”என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கங்கனா மும்பையில் உள்ள தனது வீட்டை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் வீட்டின் வெளியே கங்கனா வைத்துள்ள அறிவிப்பு பலகை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த அறிவிப்பு பலகையில், "அத்துமீறல் இல்லை. மீறுபவர்கள் சுடப்படுவீர்கள். உயிர் பிழைப்பவர்கள் மீண்டும் சுடப்படுவீர்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் பிறரை மிரட்டும் வகையில் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.