தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Kalyani Latest Interview About A Story Of Recovery From Depression In Instagram

Actress Kalyani: ‘அவ்வளவு வலி.. தோத்த இடத்துல ஜெயிச்சிட்டேன்’ - கல்யாணி உருக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 23, 2024 09:47 PM IST

இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை சந்தித்த கல்யாணி பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

நடிகை கல்யாணி பேட்டி!
நடிகை கல்யாணி பேட்டி!

ட்ரெண்டிங் செய்திகள்

தாயுமானவன், ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்தார். நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிஸியாக இருந்தார். பின்னர் 2014 ஆம் ஆண்டு ரோஹித்தை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார்.

இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை சந்தித்த கல்யாணி பலகட்ட முயற்சிகளுக்கு பிறகு அதிலிருந்து வெளியே வந்திருக்கிறார்.

இந்த நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ எனக்கு தற்போது ஏதோ ஒரு வெற்றியை அடைந்தது போல ஃபீல் கிடைத்திருக்கிறது. இது எனக்கு பெரிய விஷயம். நான் உங்களுடன் எங்கு என்னுடைய மனநல சம்பந்தமான பிரச்சினை பகிர்ந்தேனோ, அந்த இடமான அமெரிக்கா ஃபெர்மிங்ற்கு நான் மீண்டும் சென்று இருந்தேன்.

அங்கு நான் இருந்த போது, என்னுடைய மகள் சிறிய குழந்தை. அங்கிருந்த கிளைமேட் ஒத்துக்கொள்ளாமல் இருந்தது, அங்கு உடலவிலும், மனதளவிலும் பல பிரச்சினைகளை நான் சந்தித்தேன். அங்கு சென்ற போது, அதுவெல்லாம் எனக்கு நியாபகம் வந்தது. ஆனால் இந்த முறை நான் அந்த பிரச்சினைகளை 3 வது மனிதராக நின்று பார்க்கும் பார்வை எனக்கு கிடைத்தது. இப்போது என்னுடைய மகளும் நன்றாக வளர்ந்து விட்டாள்.

சந்தோஷமாக இருந்தாள். நானும் பதட்டம் அடையாமல் நிகழ்காலத்தில் இருந்தேன். இதுவே எனக்கு ஒரு மைல்ஸ் ஸ்டோனாக இருந்தது. எனக்கு இது ஒரு சின்ன வளர்ச்சி.. காரணம் நான் அதற்காக நிறைய மருத்துகள், தெரபிகள் உள்ளிட்டவற்றை எடுத்து இருக்கிறேன்.

நாம் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மறுபடியும் செல்லும் போது அது எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை சொல்ல முடியாது. ஆனால் அந்த இடத்தில் நான் இப்போது வேறு மனுஷியாக சென்று நின்று இருக்கிறேன். உண்மையில் என்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.