தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Kalyani: ‘ விஜய காந்துக்கு மரியாதை கொடுக்கலையா.. உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ' - ரமணா கல்யாணி!

Actress Kalyani: ‘ விஜய காந்துக்கு மரியாதை கொடுக்கலையா.. உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை ' - ரமணா கல்யாணி!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 05:20 AM IST

உண்மையில் அவர் எவ்வளவு ஸ்பெஷல் என்பது எனக்கு தெரியும். அதை நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய முதல் கையெழுத்தை எப்படி எழுத வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர்தான் அதனை வடிவமைத்தார்.

கல்யாணி!
கல்யாணி!

விஜயகாந்துடன் ரமணா திரைப்படத்தில் நடித்த நடிகை கல்யாணி அவரை பற்றி பேசாமல் இருந்தது விமர்சனங்களை பெற்ற நிலையில், அதற்கு அவர் பதிலளித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “ நிறைய பேர் என்னிடம், நீங்கள் விஜயகாந்த் சாருடன் இணைந்து ரமணா திரைப்படத்தில் நடித்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும் பொழுது ஏன் அவரது இறப்பு குறித்து பேசவில்லை, அவர் மீது உங்களுக்கு மரியாதை இல்லையா என்று கூறி பயங்கரமாக மெசேஜ் செய்து கொண்டிருந்தார்கள். 

உண்மையில் அவர் எவ்வளவு ஸ்பெஷல் என்பது எனக்கு தெரியும். அதை நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய முதல் கையெழுத்தை எப்படி எழுத வேண்டும் என்பதை அவர்தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர்தான் அதனை வடிவமைத்தார். 

ரமணா திரைப்படத்தில் அவர்தான் நான் நடிக்க வேண்டும் என்று சொல்லி என்னை அந்த படத்தில் கமிட் செய்தார். முதன்முறையாக நான் ரமணா படபிடிப்புக்கு சென்ற போது, விஜயகாந்தும் அவரது மனைவியான பிரேமலதாவும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். 

ட்ரெண்டிங் செய்திகள்

நான் பார்த்ததில் ஒரு ரியல் ஹீரோ விஜயகாந்த் சார் தான். அவர் கருணை உள்ளம் கொண்டவர் மட்டுமல்ல. அவர் மிகவும் அழகான மனிதர். 

பிறருக்கு சாப்பாடு கொடுப்பது என்றால் அவருக்கு அவ்வளவு சந்தோஷம். அவருக்கு எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும்.  படப்பிடிப்பில் அவர் எப்போதுமே வெளியே ஒரு ஸ்டூல் போட்டுக் கொண்டு உட்கார்ந்து, கலைஞர்களுடன் பேசிக் கொண்டே இருப்பார். 

ஒரு மனிதராக அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. அவருக்கு உண்மையிலேயே தங்க மனது. மனிதராக அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவரது இறப்பு உண்மையிலேயே எனக்கு ஷாக்கிங் தான். எனக்கு அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை என்னால் இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை” என்று பேசினார்.