தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Jyothika Is A Serious Exerciser Video Goes Viral

Actress Jyothika : வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஜோதிகா.. வீடியோ வைரல்.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Mar 06, 2024 08:14 AM IST

ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஜிம்மில் தான் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த திரைப்படத்தின் மூலம் இவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. தமிழ் மட்டுமல்லாது அடுத்தடுத்து இவருடைய வளர்ச்சி தென்னிந்திய திரைப்படங்கள் அனைத்திலும் நடிக்க தொடங்கினார். ஒரு காதல் கதாநாயகியாக மட்டுமல்லாமல் வில்லத்தனம் காட்டும் நாயகியாக பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

சந்திரமுகி திரைப்படத்தில் சந்திரமுகியாக இவர் நடித்த கதாபாத்திரத்தை இன்றுவரை ஈடு செய்ய யாரும் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது முழுமையான உழைப்பை கொடுத்து அதனை வெற்றி பெறச் செய்வது தான் இவரது வலிமை

நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்த அவர் அவருடன் காதலில் விழுந்தார். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த தம்பதி கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்ட அவர் இல்லற வாழ்வில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் திரைத்துறைக்கு வர நினைத்த ஜோதிகா சினிமாவில் கிட்டதட்ட 8 ஆண்டுகளுக்குப் பின் ‘36 வயதினிலே’ திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டே கணவருடன் சேர்ந்து 2டி தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

அதன் பின்னர் ஜெய்பீம் படம் பிரச்சினையை சந்தித்த நிலையில் தயாரிப்பு பணிகளில் இருந்து ஜோதிகா விலகுவதாக சூர்யா அறிவித்தார். இரண்டாவது இன்னிங்சில் நாச்சியார், மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம், ராதாமோகனின் காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் என பல்வேறு படங்களில் நடித்தார்.

இதனிடையே எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜோதிகா தன் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற புகைப்படங்களை அதில் பதிவிட்டார். தொடர்ந்து தான் வரைந்த ஓவியங்கள், ஜெய்பீம் திரைப்படத்திற்காக சூர்யாவும், தானும் வாங்கிய தேசிய விருதுகள் உள்ளிட்டவை தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றையும் அதில் பகிர்ந்தார்.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. மீண்டும் சினிமாவில் ஜொலிக்கவேண்டும் என்பதற்காக தனது எடையை குறைக்க முடிவெடுத்து தீவிர ஒஒர்க் அவுட்டில் இறங்கி இருக்கிறார்.

அவர் வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார். ஜிம்மில் தான் தலைகீழாக நின்று ஒர்க் அவுட் செய்யும் இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்