Actress Jyothika: முதல் ஷோ முடியும் முன்பே நெகட்டிவ் ரிவ்யூ.. எல்லாம் திட்டமிட்டது.. ஜோதிகா கோபம்..
Actress Jyothika: கங்குவா படத்தின் முதல் ஷோ முடியும் முன்பே கங்குவா படத்திற்கு எதிர்மறையான விமர்சனம் வந்தது திட்டமிட்டு நடந்தது போல இருந்ததாக நடிகை ஜோதிகா கருத்து தெரிவித்துள்ளார்.

Actress Jyothika: நடிகர் சூர்யாவின் சமீபத்திய வெளியீடான கங்குவா, விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து எதிர்மறையான வரவேற்பைப் பெற்றது. இதனால், தன் கணவர் சூர்யாவை ஆதரித்தும், கங்குவா படத்தை பற்றியும் ஜோதிகா, ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார். இதுகுறித்து தற்போது அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்.
கங்குவா பற்றிய கேள்வி
நடிகை ஜோதிகா நடிப்பில் டப்பா கார்ட்டெல் வெளியாகியுள்ளது. இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, நடிகர் சூர்யா குறித்தும் அவர் மீது வைக்கப்பட்ட மோசமான விமர்சனங்கள் குறித்தும் பேசி இருக்கிறார்.
அந்த உரையாடலின் போது, சூர்யா மற்றும் கங்குவா படத்திற்கு எதிரான எதிர்மறை விமர்சனங்கள் வந்தது. குறிப்பாக “இந்த நடிகரின் வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று மக்கள் கூறினர். அது குறித்து ஜோதிகாவின் கருத்து என்ன எனக் கேட்கப்பட்டது.