ஜான்வி கபூரின் இதயத்தையே உடைத்த படம் எது தெரியுமா? அதுவும் ஒரு தமிழ் படம் தான்..!
நடிகை ஜான்வி கபூரின் இதயத்தை ஒரு தமிழ் படம் உடைத்து விட்டது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இது அத்தனையும் உண்மை தான். இதை அவரை கூறியுள்ளார்.
தமிழில் வெளியான அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்திருந்த இந்தப் படம் சுமார் ரூ.335 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
அமரன் ஓடிடி ரிலீஸ்
மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவானது. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் வெளியான அனைத்து மொழிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமரன் படம் வெளியான ஒரு மாதத்திற்கு பின் ஓடிடியில் ஸ்டிரீம் செய்யப்பட்டது. இந்தப் படத்தை தாமதமாக OTTயில் பார்த்துள்ளார் இளம் நடிகை ஜான்வி கபூர். அவர் படத்தை பார்த்த பிறகு தனது விமர்சனத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதயத்தைத் தொட்டது
அமரன் படத்தைப் பாராட்டி ஜான்வி கபூர் அவரது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் இந்தப் படம் இதயத்தைத் தொட்டதோடு மட்டுமல்லாமல் அது என் இதயத்தை உடைக்கவும் செய்ததாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். மேலும் அமரன் படத்தை இதயத்தை உடைக்கும் இந்த ஆண்டின் படம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமரன் படத்தைப் பார்த்து இந்த ஆண்டு அற்புதமாக முடிந்ததாகவும் ஜான்வி பதிவிட்டுள்ளார். மேலும் அமரன் படத்தை தாமதமாகப் பார்த்தேன். ஆனால் இது ஒரு மாயாஜால, உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ்ச்சியான படம். இதயத்தைத் தொடும், இந்த ஆண்டின் இதயத்தை உடைக்கும் படத்தைப் பார்த்து இந்த ஆண்டு அற்புதமாக முடிந்தது” என ஜான்வி கபூர் இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ளார்.
அமரன் மெகா பிளாக்பஸ்டர்
அமரன் படம் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை ஒட்டி திரையரங்குகளில் வெளியானது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. சுமார் ரூ.120 கோடி செலவில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.340 கோடி வசூல் செய்தது. நல்ல படம் என்ற பெயரைப் பெற்றதால் பாக்ஸ் ஆபிஸிலும் அமரன் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
அமரன் திரைப்படக் குழு
அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜாக சிவகார்த்திகேயன், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் வேடத்தில் சாய் பல்லவி மிகவும் சிறப்பாக நடித்தார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை ராஜ்குமார் பெரியசாமி திரையில் அற்புதமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் சித்தரித்தார்.
இதனால் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் ராகுல் போஸ், பூவன் அரோரா, ஹிதாக்ஷி, ஸ்ரீகுமார், சாம்பிரசாத், சாம்பிரசாத், சியாம் மோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
அமரன் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சார்பில் உலக நாயகன் கமல்ஹாசன், மகேந்திரன், விவேக் கிருஷ்ணன் ஆகியோர் தயாரித்தனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, சி.எச். சாய் ஒளிப்பதிவு செய்தார்.
அமரன் OTT
அமரன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யபப்டுகிறது. டிசம்பர் 5 ஆம் தேதி இந்தப் படம் OTTயில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது.
டாபிக்ஸ்