'உங்களுக்கு எல்லாம் பீரியட்ஸ் வந்தால் அணு ஆயுதப் போரே வந்திடும்' கோபத்தில் கொந்தளித்த நடிகை ஜான்வி கபூர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'உங்களுக்கு எல்லாம் பீரியட்ஸ் வந்தால் அணு ஆயுதப் போரே வந்திடும்' கோபத்தில் கொந்தளித்த நடிகை ஜான்வி கபூர்

'உங்களுக்கு எல்லாம் பீரியட்ஸ் வந்தால் அணு ஆயுதப் போரே வந்திடும்' கோபத்தில் கொந்தளித்த நடிகை ஜான்வி கபூர்

Malavica Natarajan HT Tamil
Published Apr 20, 2025 12:47 PM IST

பெண்களின் மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் வலியைப் பற்றி கேலி செய்தவர்களுக்கு நடிகை ஜான்வி கபூர் பதிலடி கொடுத்துள்ளார்.

'உங்களுக்கு எல்லாம் பீரியட்ஸ் வந்தால் அணு ஆயுதப் போரே வந்திடும்' கோபத்தில் கொந்தளித்த நடிகை ஜான்வி கபூர்
'உங்களுக்கு எல்லாம் பீரியட்ஸ் வந்தால் அணு ஆயுதப் போரே வந்திடும்' கோபத்தில் கொந்தளித்த நடிகை ஜான்வி கபூர்

கனவு போல இருக்கும்

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி ஒரு கனவு போல இருக்கும். அதை நம்மால் உணர முடியுமே தவிர வெளிப்படுத்தவோ மற்றவர்களுக்கு அதை நாம் உணர்வதைப் போல தெரிவிக்கவோ முடியாது. பெண்களைப் போல ஆண்களுக்கு மாதவிடாய் வந்தால் அணு ஆயுதப் போர் நடக்குமோ என்ற சந்தேகம் வருகிறது என்று ஹவுட்டர்ஃப்லியுடன் பேசியபோது கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் பெண்களின் மாதவிடாய் வலியைப் பற்றி கேலி, கிண்டல் செய்தவர்களுக்கு இவர் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.

கோபப்படுவதை நிறுத்துங்கள்

அந்தப் பேட்டியில், "மாதவிடாய், அதனால் ஏற்படும் வலி, மனநிலை மாற்றங்கள் பற்றி நான் வாதிடுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், எனக்கு இது மிகப்பெரிய விஷயம். பெண்கள் கொஞ்சம் சீற்றமாக இருந்தால், அவர்களைத் திட்டுவதை நிறுத்துங்கள். அவர்களின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை ஒருமுறை சிந்தித்து பேசுங்கள்" என்று ஜான்வி கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறிது நேரம் கொடுங்கள்

"பெண்கள் கோபத்தில் ஏதாவது சொன்னால், அவர்கள் மீது உடனே கத்தாமல், அவர்கள் சரியாகுவதற்கு சிறிது நேரம் கொடுங்கள். மாதவிடாய் வந்துவிட்டதா, கொஞ்சம் நேரம் வேண்டுமா என்று கேட்டால், அவர்கள் சொல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் ஒரு நிமிடம் நேரம் கொடுங்கள். ஏனென்றால், பெண்களில் ஹார்மோன் மாற்றங்கள், அவர்கள் அனுபவிக்கும் வலி ஆண்களுக்கு எளிதில் புரியாது" என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.

ஒரு நிமிடம் கூட தாங்க முடியாது

"ஆனால், ஒரு விஷயத்தை நான் உறுதியாகச் சொல்ல முடியும். பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்கள் கேலி செய்கிறார்கள், ஜோக்குகள் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கும் அதே வலி இருந்தால், இந்த மாதவிடாயை ஒரு நிமிடம் கூட அவர்கள் தாங்க மாட்டார்கள். அந்த வலி, மனநிலை மாற்றம், சீற்றத்தை அவர்கள் ஒருபோதும் தாங்க மாட்டார்கள். ஆண்களுக்கு மாதவிடாய் வந்தால் அணு ஆயுதப் போர் (அணு குண்டு போர்) கூட நடக்குமா என்று யாருக்குத் தெரியும்" என்று ஜான்வி கபூர் அதிர்ச்சி கருத்து தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர் படங்கள்

ஜான்வி கடந்த 2024 ஆம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிசர்ஸ் மகி, உலஹ், தேவாரா பாகம் 1 போன்ற படங்களில் நடித்தார். பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்த நடிகை தேவாரா பாகம் 1 படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் அடியெடுத்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, உப்பென்னா படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் புச்சி பாபு சானாவின் இயக்கத்தில் தற்போது ஜான்வி கபூர் குளோபல் ஸ்டார் ராம் சரணுடன் இணைந்து அடுத்த தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.