Actres Jhanvi Kapoor: ‘2025ஆம் ஆண்டிலும் இது வெட்கக் கேடானது..’ ஜான்வியின் காதலன் காட்டம்..
Actres Jhanvi Kapoor: நடிகை ஜான்வி கபூரின் காதலரான ஷிகர் பஹாரியா, தன்னை தலித் என்று கிண்டல் செய்த நெட்டிசனை கடுமையாக கண்டித்துள்ளார். அவரது பதில் தற்போது வைரலாகி வருகிறது.

Actres Jhanvi Kapoor: நடிகை ஜான்வி கபூருக்கு காதலர் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இவர்கள் இருவரின் பெயர்கள் அடிக்கடி டிவிக்களிலும், சோசியல் மீடியாக்களிலும் உலா வந்த நிலையில், ஜான்வியின் காதலர் ஷிகர் பஹாரியா பெயர் தற்போது மீண்டும் செய்திகளில் அடிபட்டு வருகிறது. ஆனால், அதற்கான காரணம் ஜான்வி கபூர் அல்ல.
ஷிகர் பஹாரியா நடிகை ஜான்வி கபூரை காதலிப்பதால் அவரது சாதி குறித்து குறிப்பிட்ட நெட்டிசன் ஒருவரின் கருத்துக்கு கோபமடைந்து எதிர்வினை ஆற்றியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் ஒதுக்கப்பட்ட ஒன்று இருந்தால் அது உங்கள் சிந்தனை மட்டுமே என்று அவர் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
வெட்கக்கேடானது
கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஷிகர், ஜான்வி மற்றும் அவர்களது செல்லப்பிராணிகளுடன் இருந்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். சமீபத்தில் ஒருவர் அந்தப் பதிவுக்கு கீழே "நீங்கள் தலித் அல்லவா (Lekin tu toh Dalit hai)" என்று கருத்து தெரிவித்தார். அதற்கு ஷிகர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் அந்தக் கருத்தை பதிவிட்டு, "2025 ஆம் ஆண்டிலும் உங்களைப் போன்ற சிறிய, பிற்போக்கான சிந்தனையுள்ளவர்கள் இருப்பது மிகவும் வெட்கக்கேடானது" என்று எழுதியுள்ளார்.
இந்தியாவின் வலிமை வேறுபாடு
இந்தியாவின் வலிமை அதன் வேறுபாடு, ஒற்றுமையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். "தீபாவளி என்பது ஒளி, வளர்ச்சி, ஒற்றுமை பண்டிகை. இந்த உணர்வுகள் உங்கள் வரையறுக்கப்பட்ட புத்திக்கு எட்டாது. இந்தியாவின் வலிமை எப்போதும் அதன் வேறுபாடு, ஒற்றுமையில் தான் உள்ளது. இது உங்களுக்குப் புரியாது. அறியாமையைப் பரப்புவதை நிறுத்தி, நீங்களே கொஞ்சம் வளர்ந்து பாருங்கள். ஏனென்றால் இங்கு உண்மையில் ஒதுக்கப்பட்ட ஒன்று இருந்தால் அது உங்கள் சிந்தனை முறை மட்டுமே" என்று ஷிகர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ஹைதராபாத் ஆஞ்சநேயர் கோயிலில் ஜான்வி கபூர் சிறப்பு தரிசனம்..
தீபாவளி வாழ்த்து பதிவு
கடந்த ஆண்டு நவம்பரில் ஷிகர் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து புகைப்படங்களைப் பதிவிட்டு, "ஸ்ரீராமரின் வருகை ஒளி, செழிப்பான ஆண்டைத் தர வேண்டும். தீமை மீது நன்மை வெற்றி பெற வேண்டும். நமக்குத் தேவைப்படுவோருக்கு உதவ, உயர்த்திப் பிடிக்க, பாதுகாக்க எப்போதும் தர்மப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் வலிமை, ஞானம் நமக்கு இருக்க வேண்டும்" என்று எழுதியுள்ளார்.
ஷிகர் பஹாரியா யார்?
ஜான்வி கபூரின் காதலரான ஷிகர், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன். அவரது தாய் ஸ்மிருதி ஷிண்டே ஒரு நடிகை. அவரது அண்ணன் வீர் பஹாரியா சமீபத்தில் ஸ்கை போர்ஸ் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இந்தப் படத்தில் அக்ஷய் குமார், நிம்ரத் கவுர், சாரா அலி கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜான்வி- ஷிகர் காதல்
ஷிகர், ஜான்வி ஆகியோர் தாங்கள் டேட்டிங் செய்கிறோம் என்று எப்போதும் கூறவில்லை என்றாலும், அவர்கள் அடிக்கடி ஒன்றாக நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறார்கள். சமீபத்தில், ஜான்வி கபூர் தனது காதலன் ஷிகர் பஹாரியாவின் பெயர் மற்றும் புகைப்படங்கள் அச்சிடப்பட்டிருந்த டி-ஷர்ட் அணிந்திருந்தார்.
போனி கபூர் தயாரிப்பில் வெளியான மைதான் படத்தின் ப்ரமோஷன் விழாவில் கலந்துகொண்ட ஜான்வி கபூர் ஷி என்ற எழுத்து பொறிக்கப்பட்ட செயினை அணிந்திருந்தார். ஜான்வி கபூர் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் தேவரா: பாகம் 1 இல் நடித்தார். தற்போது ராம் சரண் உடன் ஆர்.சி 16, சித்தார்த் மல்ஹோத்ரா உடன் பரம் சுந்தரி, வருண் தவான் உடன் சன்னி சங்காரி கி துலசி குமாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
