Actress Ivana: ‘லவ் டுடே’ புகழ் இவானா நடிப்பில் தயாராகியுள்ள படத்திற்கு U சான்றிதழ்!
Mathimaran: எம்.எஸ்.பாஸ்கர் போஸ்ட் மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், 'கம்யூனிஸ்ட்னா சாமி கும்மிடக் கூடாதா' என இவர் பேசிய வசனம் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
லவ் டுடே, எல்ஜிஎம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை இவானா நடித்துள்ள படம் மதிமாறன்.
வெங்கட் செங்குட்டுவன், இவானா தவிர, எம்.எஸ்.பாஸ்கர், ஆடுகளம் நரேன், ஆரத்யா மற்றும் பாவா செல்லதுரை ஆகியோரும் மதிமாறன் படத்தில் நடித்துள்ளனர்.
மந்த்ரா வீரபாண்டியன் இயக்கியுள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ப்ரவேஸ் கே ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூரியா எடிட்டிங் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் கதை குள்ளமாக இருப்பவர் சந்திக்கும் அவமானங்கள், சவால்கள் ஆகியவை குறித்து அலசுகிறது.
எம்.எஸ்.பாஸ்கர் போஸ்ட் மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில், 'கம்யூனிஸ்ட்னா சாமி கும்மிடக் கூடாதா' என இவர் பேசிய வசனம் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் படத்தின் குழுவினர் சென்சாருக்கு விண்ணப்பித்து இருந்தனர். படத்திற்கு சென்சார் குழு U சான்றிதழ் வழங்கியுள்ளது.
யு சான்றிதழ் என்பது குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்று அர்த்தம் ஆகும்.
திருநெல்வேலி, சிவகங்கை, காளையார்கோவில், சென்னை ஆகிய இடங்களில் மதிமாறன் படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது.
டிசம்பர் 29ம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
அலீனா ஷாஜி என்ற இயற்பெயர் கொண்ட இவானா, தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
மாஸ்டர்ஸ் (2012) படத்தில் துணை வேடம் மூலம் மலையாளத் திரையுலகில் ஒரு குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் இவானா. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ராணி பத்மினி (2015) படத்தில் பணியாற்றினார். பின்னர் அனுராகா கரிக்குன் வெல்லம் (2016) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மகளாக நடித்தார்.
ஆன்லைனில் அனுராகா கரிக்குன் வெல்லம் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையைக் கண்ட இயக்குநர் பாலா, பின்னர் ஜோதிகா மற்றும் ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த தனது தமிழ் படமான நாச்சியார் (2018) படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார்.
தமிழ் ரசிகர்களுக்கு எளிதாக உச்சரிக்கக்கூடிய ஒரு பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று பாலா கேட்டுக் கொண்டார், மேலும் தனது உறவினரின் உதவியுடன், இவானா என்ற பெயரை இறுதி செய்தார். முறைப்படி தமிழ் கற்றுக் கொண்டு, அரசி என்ற இளம், அப்பாவி பெண்ணாக நடித்த இவானா, நாச்சியார் படத்தில் தனது நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.
கள்வன் என்ற தமிழ் படத்திலும், செல்ஃபிஷ் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
டாபிக்ஸ்