Actress Ileana: 'மகன் கோவா பீனிக்ஸ் பெயருக்கு இதுதான் அர்த்தம்’ - நடிகை இலியானா நச்சென பதில்!
இலியானா டி குரூஸ் தனது கூட்டாளியான மைக்கேல் டோலனை மணந்தார், அவருக்கு முதல் குழந்தை பிறந்தது, அந்த மகனுக்கு கோவா பீனிக்ஸ் டோலன் என்று பெயரிட்டனர்.
பிரபல நடிகை இலியானா டி குரூஸ், தனது மகன் கோவா பீனிக்ஸ் டோலனின் அர்த்தத்தை வெளிப்படத் தெரிவித்துள்ளார்.
தமிழில் கேடி, நண்பன் ஆகியப் படங்களில் நடித்து புகழ்பெற்றவர், நடிகை இலியானா. இவர் கடந்த ஆண்டு மைக்கேல் டோலன் என்னும் நடிகரைத் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார்.
முதன்முறையாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் தனது குழந்தை குறித்துப் பேசிய இலியானா, ‘’ஆரம்பத்தில் தனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்று நம்பினேன். அதனால் பெண் குழந்தைகளின் பெயர்களைப் பற்றி மட்டுமே யோசித்தேன். ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைக்கவில்லை. அதேபோல் ஆண் குழந்தைகளின் பெயரைப் பற்றிகூட நான் யோசிக்கவில்லை. ஒரு சில பெயர்களை முன்பே யோசித்து வைத்திருக்க வேண்டுமா என்று நான் யோசித்தேன். ஆனால், பின்னர் அது ஒரு பெண்ணாக இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன்’’ என்றார்.
தனது மகனின் பெயரின் அர்த்தத்தைச் சொன்ன இலியானா:
மேலும் அவர்,"எனக்கும் ஒரு தனித்துவமான பெயர் இருப்பதால் என் குழந்தைக்கு அசாதாரணமான பெயர் ஒன்றை வைக்க விரும்பினேன்(குழந்தையின் பெயர் - கோவா பீனிக்ஸ் டோலன்). என் கணவர் அதை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் இதைப் பற்றி கணவர் மைக் (மைக்கேல்) உடன் பேசினேன். அவர் கூட அதை அழகாக உணர்ந்தார். பீனிக்ஸ் என்பது சிறிது காலமாக என் மனதில் இருந்த பெயர். மேலும், 'சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல உயிர்த்தெழுவேன்' என்ற வரி ஊக்கமளித்துக்கொண்டே இருக்கும். உண்மையில், நான் 2018ஆம் ஆண்டில் ஒரு பீனிக்ஸ் பறவையை எனது உடலில் பச்சை குத்தினேன். இது எனக்கு ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. மைக் இந்தப் பெயரை விரும்பினார். எனது மகன் கோவா வளரும்போது கூட, தன் பெயர் குறித்து விரும்புவார் என்று நம்புகிறேன்"என்று அவர் கூறினார்.
இலியானாவின் குடும்பம்:
இலியானா டி குரூஸ் ஆகஸ்ட் 1, 2023அன்று தனது முதல் குழந்தையைப் பெற்றார். அவர் தனது குழந்தையின் பெயரையும் அவர் பிறந்த செய்தியையும் சில நாட்களுக்குப் பிறகே தனது ரசிகர்களுக்கு வெளிப்படுத்தினார். அவரது கர்ப்ப அறிவிப்பு கூட ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் தனது கணவர் மைக்கேல் டோலன் மற்றும் மகன் கோவாவுடன் அமெரிக்காவில் வசிக்கின்றார். கோவாவின் பிறந்த நாளுக்கு முன்பு, இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் கூறின. ஆனால், அதை இலியானா உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ இல்லை. எனவே, ஊடகங்களும் மைக்கேலை, இலியானாவின் கணவர் என்றே வர்ணிக்கின்றன.
இலியானா அடுத்து ‘’தோ அவுர் தோ பியார்'' எனும் பாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் வித்யா பாலனும் நடிக்கிறார். அதற்காக அவர் இல்லறத்துணை மற்றும் மகனுடன் இந்தியா வர வாய்ப்புள்ளது. ரன்தீப் ஹூடாவுடன் அன்ஃபேர் & லவ்லி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இலியானா கடைசியாக, இந்தியில் ‘’தி பிக் புல்'' படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9