Honey Rose compliant: எப்போ பாரு இப்படி தான்.. என் நிம்மதியே போச்சு.. தொழிலதிபரால் போலீஸ் ஸ்டேஷன் சென்ற ஹனி ரோஸ்!
நடிகை ஹனி ரோஸ் தொழிலதிபர் ஒருவர் தன்னை இரட்டை அர்த்த வசனத்தில் பேசுவதாகவும், அத்துமீறி தொடுவதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை ஹனி ரோஸ். இவர், தெலுங்கு நடிகர் பாலைய்யாவின் வீரசிம்ம ரெட்டி படத்தில் மிகவும் கிளாமராக நடித்து மக்களிடம் நன்கு பரிட்சையமானார்.
இதையடுத்து அவர் அவ்வப்போது கடை திறப்பு விழா, நிறுவனங்கள் திறப்பு விழாவில் பங்கேற்று வந்தார். அந்த சமயத்தில் தான் தன்னை தொழிலதிபர் ஒருவர் மோசமாக நடத்துகிறார் என்றும், தான் பங்கேற்கும் விழாக்களில் வேண்டுமென்றே பங்கேற்று தன்னை இரட்டை அர்த்த வசனத்தில் பேசுவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஹனி ரோஸ் குற்றச்சாட்டு
இதுகுறித்து அவரது சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்த ஹனி ரோஸ், ஒருவர் அழைத்த நிகழ்ச்சிக்கு தான் வரவில்லை என்பதால் வேண்டுமென்றே நான் செல்லும் எல்லா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அப்போது என்னை டபுள் மீனிங் வார்த்தைகளால் பேசி அசிங்கப்படுத்துகிறார் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து தான் பதிலளிக்காமல் இருப்பதால் அவரது வார்த்தைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்ற அர்த்தம் இல்லை. அவன் வார்த்தைகளை அலட்சியப்படுத்தி புறக்கணிக்க முயல்கிறேன். ஆனால், அந்த நபர் பேசும் வார்த்தைகள் சட்டத்திற்கு புறம்பானது. அது நிச்சயம் குற்றச் செயல் தான். அவரின் செயல்கள் உள்நோக்கம் கொண்டவை.
ஆபாச கமெண்டு
பெண்களுக்கு எதிரான பாலியல் வர்ணக் கருத்துகளைச் சொல்வதும், அவர்களைப் பின்பற்றுவதும் முதன்மையான குற்றங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இருப்பினும் அந்த நபர் யார் எனக் கூறாமல் இருப்பதால், இன்ஸ்டாகிராம் முழுவதும் அந்த நபர் யாராக இருக்கும் என்ற பேச்சுக்கள் தான் எழுந்து வருகிறது.
இந்நிலையில், நடிகை ஹனி ரோஸின் இந்தப் பதிவை பார்த்த பலர் அவரை ஆபாசமாக திட்டி கருத்துகளை தெரிவித்தனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், இதுகுறித்து போலீசில் புகாரளித்தார். இதையடுத்து அவர்கள் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்,
தொழிலதிபர் மேல் புகார்
ஹனி ரோஸ் இத்துடன் இந்த பிரச்சனையை நிறுத்தவும் இல்லை. போலீசாரிடம் தன்னை அவமானப்படுத்திய தொழிலதிபர் மீதும் புகாரளித்துள்ளார். அந்தப் புகாரின் மூலம் தொழிலதிபர் போபி செம்மண்ணூர் தான் ஹனி ரோஸை அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது
ஹனி ரோஸின் புகாரின் படி, அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கோழிக்கோட்டில் உள்ள நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றதாகவும், அங்கு ஆயிரக்கணக்காணோர் கூடியிருந்த நிலையில் தன்னிடம் அனுமதி வாங்காமல் என் கழுத்தில் செயின் அணிவித்ததுடன் என் கையை பிடித்து சுற்றினார் என்றும் கூறி இருக்கிறார்.
மேலும், இதையடுத்து போபி செம்மணூர் தன்னை பற்றியும் மற்ற பெண்கள் பற்றியும் இரட்டை அர்ததத்தில் பேசிய வீடியோ ஆதாரங்களையும் அவர் சமர்பித்துள்ளார். இதனால் போபி செம்மணூர் மீது ஐடி சட்ட பிரிவு, பெண்களை களங்கப்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தொழிலதிபர் விளக்கம்
இந்நிலையில், தொழிலதிபர் போபி செம்மணூர் இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளார். தான் ஹனி ரோஸிடம் எந்த தவறான எண்ணமும் கொண்டிருக்கவில்லை. அவரை வேறு எண்ணத்துடன் தான் அணுகவும் இல்லை என்றார்.
கடைத் திறப்பு விழாவிற்கு வருவோருக்கு கையை பிடித்து வளையல் போடுவதும், கழுத்தில் செயின் போடுவதும் எள்லாம் புதிதல்ல. அவர் இதைப் பற்றி என்னிடமே பேசி இருக்கலாம். ஆனால் ஏன் போலீஸ் வரை சென்றார் எனத் தெரியவில்லை எனக் கூறினார்.
டாபிக்ஸ்