Actress Gowthami: ‘பிரேக்கப் ரொம்ப வலிக்கும்தான் ஆனா.. மாத்துறதுக்கு இங்க நிறைய’ - கெளதமி ஓப்பன் டாக்!
Actress Gowthami : அதிலிருந்து அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள். அது உங்களுக்கு எவ்வளவு வலியை கொடுத்தாலும், அதில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை தேடுங்கள். அந்த பாரத்தை மறப்பதற்கு, புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள்.- கெளதமி ஓப்பன் டாக்!
Actress gowthami: பிரபல நடிகையான கெளதமி காதல் தோல்வி குறித்து பேசி இருக்கிறார். இது குறித்து எஸ்.எஸ். மியூசிக் சேனலுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரேக்கப் இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக இளம் வயதில், அதை சந்திக்கும் பொழுது, நீங்கள் இன்னும் அதிகமாக மனம் உடைந்து போவீர்கள்.
உடைந்து போய் விடுவீர்கள்:
நான் இந்த இடத்தில் சொல்ல விரும்புவது என்னவென்றால், நீங்கள் பள்ளி, கல்லூரி என எவ்வளவு கட்டங்களை தாண்டி, சாதித்து இங்கு வந்து இருக்கிறீர்கள் என்பதை தயவு செய்து யோசித்து பாருங்கள். நீங்கள் ஒரு பிரேக்கபை சந்திக்கும் பொழுது, அந்த பிரேக்கப் எதனால் ஒர்க்அவுட் ஆகவில்லை என்பதை யோசியுங்கள்.
அதிலிருந்து அனுபவத்தை மட்டும் எடுத்துக் கொண்டு முன்னேறுங்கள். அது உங்களுக்கு எவ்வளவு வலியை கொடுத்தாலும், அதில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை தேடுங்கள். அந்த பாரத்தை மறப்பதற்கு, புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளுங்கள்.
நிறைய இடங்களுக்கு பயணப்படுங்கள். நீங்கள் அந்த நபருடன் இருக்கக்கூடிய சூழ்நிலைகளில் மட்டும் சுற்றி வரும் பொழுது, அது தொடர்பான நினைவுகள் உங்களை மீண்டும் மீண்டும் துன்புறுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அந்த சூழ்நிலையை தவிர்த்து பயணம் செய்ய தொடங்கி விடுங்கள்.
வேலையை மாற்றுங்கள்:
உங்களது வேலை செய்யும் இடத்தை கூட மாற்றி விடுங்கள் காரணம், நீங்கள் அப்படி ஒரு மாற்றத்தை நடத்தும் பொழுது, உங்களுடைய பொறுப்புகள் மாறும். நீங்கள் புதிதாக ஒரு மாற்றத்தை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வர முடியும். ஆனால், நடந்தது எதையும் நீங்கள் உங்களுடைய தோல்வியாக மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள்.” என்று பேசினார்.
மேலும் பேசும் அவர் பேசும் போது, “ நீங்கள் தான் உங்களுடைய பலம். நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்து, அந்த ரிலேஷன்ஷிப் சரிவர ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், அதற்கு நீங்கள் அதற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அப்பா, அம்மா, மகள், கணவர் காதலர் என எந்த விதமான ரிலேஷன்ஷிப் ஆக இருந்தாலும் சரி, அந்த ரிலேஷன்ஷிப்பில் இருவருக்கும் இடையே, ஒரு மையப் புள்ளி ஆனது கண்டிப்பாக இருக்கும்.
மையப்புள்ளியை தாண்டாதீர்கள்:
அந்த மைய புள்ளி வரை இருவரும் வந்து, நீ பாதி வேலையைச் செய், நான் பாதி வேலையை செய்கிறேன் என்று இருக்க வேண்டும். ஆனால் சில பேருக்கு, ஏதோ ஒரு காரணத்தால் அந்த மையப் புள்ளிக்கும், அவருக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கும். இங்கு நடக்கக்கூடிய தவறு என்னவென்றால், இன்னொரு பக்கம் இருக்கக்கூடிய அந்த நபர் ஐயோ… நீ அவ்வளவு தூரம்தான் கடந்து வந்திருக்கிறாயா என்று சொல்லி, அவர்களுக்காக இவர்கள், மையப்புள்ளியில் இருந்து இன்னும் கொஞ்சம் தூரத்தை கடந்து அவர்கள் பக்கம் வருவார்கள்.
அப்படி செய்யும் போது, நாம் அதை அவர்களுக்கு பழக்கப்படுத்தி விடுகிறோம். அந்த சமயத்தில் அந்தப் பக்கத்தில் இருக்கும் நபர், நமக்காக அவர் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரே, நமக்காக இவ்வளவு மெனக்கெடுக்கிறாரே என்று சொல்லி சந்தோஷப்படுவார்கள். ஆனால், மெனக்கெட்டவர் இரண்டாவது முறையும் அப்படியே மெனக்கெடுவார். மூன்றாவது முறையும் அப்படியே மெனக்கிடுவார். காலப்போக்கில் அது அவர்களுக்கு பழக்கம் ஆகிவிடுகிறது.
அப்படி இருக்கும் பொழுது, அந்த இன்னொரு நபர், நான் ஏன் உனக்காக அவ்வளவு தூரம் வரவேண்டும்; நீ எனக்காக இங்கு இன்னும் கொஞ்சம் தூரம் வா என்று சொல்லி, மொத்த வேலையையும் நம்மீது கட்டிவிடுவார்கள். இதை நான் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பாடமாக கற்று இருக்கிறேன். ஆகையால், அது எந்தவித ரிலேஷன்ஷிப்பாக இருந்தாலும் சரி நீங்கள் அந்த மையப் புள்ளியை தாண்டக்கூடாது.
இருவருக்கும் இடையேயான அன்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை சமமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உறவு நீண்ட நாட்கள் நீடிக்கும். நீங்கள் 50 சதவீதத்தை கடக்கும் பொழுது, உங்களுக்கும் அதை செய்து பழக்கமாகிவிடும். எதிர் தரப்புக்கும் வாங்கி பழக்கமாகிவிடும். அது நல்லதல்ல” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்