தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actress Dr Sharmila Interview About Vck And Hindus

Dr Sharmila: ‘டெய்லி 100 சங்கி திட்டுனா தான்..’ ஷர்மிளா பேட்டி!

HT Tamil Desk HT Tamil
Mar 28, 2023 06:00 AM IST

என்னுடைய சிந்தனைகளுக்கு பெரியாரும், அம்பேத்கரும் தான் காரணம். என் கணவரிடம் இருந்து நிறைய அரசியல் கற்றுக் கொண்டேன். திருமாவளவன் பேச்சுக்கள் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நடிகையும் விசிக ஆதரவாளருமான ஷர்மிளா
நடிகையும் விசிக ஆதரவாளருமான ஷர்மிளா

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘பிரமாணப் பெண்ணாக பிறந்து விடுதலை சிறுத்தைகள் மகளாக வாழ்வதாக ஒரு நொடி கூட நான் நினைத்தது இல்லை. பிராமின் என்பது என்னுடைய அடையாளமாக நான் நினைக்கவில்லை. அது தான் என்னுடைய அடையாளம், அது தான் என்னுடைய ஒரு பகுதி என்று ஒரு போதும் நான் கருதியது இல்லை. 

பிராமண குடும்பத்தில் பிறந்தது என்னுடைய தவறு அல்ல. என்னுடைய விருப்பத்தில் நடந்ததும் அல்ல. பிறந்துவிட்டோம் என்பதால், அது என் அடையாளமாக மாறாது. அது என்னை எந்த விதத்திலும் பாதித்ததும் அல்ல.

பிராமண பெண்களுக்கு இருக்கும் வழிமுறைகள் யார் எழுதியது? எப்போது, எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டது? ஒரு சமூக ஒழுங்கு என்கிற விசயத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஏற்றத்தாழ்வுள்ள சமூகத்தில் இவங்க இதை தான் செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை உருவாக்குவதற்காக ஏதோ ஒரு காலத்தில் இருந்தவர்கள் உருவாக்கியது அது. 

என் அப்பா இன்றும் தீவிர ஆன்மிகவாதி. காலை, மாலை 2 மணி நேரம் பூஜை செய்வார். அது அவருடைய நம்பிக்கை. அதில் நான் தலையிட்டது இல்லை. அவரும், ‘நீ ஏன் இதையெல்லாம் பேசுறே’ என்று, என்னிடம் வற்புறுத்தியது இல்லை. ஆன்மிகமும்- சமூகநீதியும் இணைந்த வீடு தான் எங்கள் வீடு.

என் கணவர் பாலாஜியை சந்தித்த பிறகு தான், எனக்கு நிறைய விசங்கள் புரிய ஆரம்பித்தது. அதற்காக அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பெண்ணியம் பேசுபவர்கள் கண்டிப்பாக சனாதனத்தை எதிர்ப்பார்கள். 

ட்விட்டரில் எனது கருத்துக்களுக்கு விமர்சனம் வைப்பவர்களின் ஐடியை போய் பார்த்தீர்கள் என்றால், முக்கால்வாசி ஃபேக் ஐடியாக தான் இருக்கும். டிபி பிக்சர் கூட வைக்க திராணியில்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் சைக்கலாஜி என்னவென்றால், மனஉளைச்சல் ஏற்படுத்தினால் இவர்கள் பின்வாங்கி விடுவார்கள் என்பது தான். 

அதற்கு நாம் ஆளானால், அவர்கள் வெற்றி பெற்ற உணர்வை பெறுவார்கள். இதனால், அதை கடந்து போக வேண்டும். அந்த புரிதல் வேண்டும். ஒரு நாளைக்கு 100 சங்கி, நம்ம டைம் லைன்ல வந்து திட்டவில்லை என்றால், அன்று நாம ஏதோ நல்லது செய்யவில்லை என்று தோன்றுகிறது. 

என்னுடைய சிந்தனைகளுக்கு பெரியாரும், அம்பேத்கரும் தான் காரணம். என் கணவரிடம் இருந்து நிறைய அரசியல் கற்றுக் கொண்டேன். திருமாவளவன் பேச்சுக்கள் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். சந்தோசமாக இருக்கும் போது யாரும் சாமியைப் பற்றி பேச மாட்டார்கள். வருத்தமாக, பிரச்னைக்குள் இருக்கும் போது தான் கடவுளை பயன்படுத்துகிறார்கள். ஆன்மிகத்தை பயன்படுத்தி தான், பலர் மக்களை கட்டுப்படுத்துக்கிறார்கள்,’’

என்று அந்த பேட்டியில் ஷர்மிளா பேசியுள்ளார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.