Actress Devayani: 'இது என்னோட வலிக்கு கிடைச்ச விருது.. ரொம்ப பெருமையா இருக்கு'- தேவயானி
Actress Devayani: என் வாழ்வில் நடந்த வலி மிகுந்த நிகழ்வுகளை வெளிப்படுத்திய தருணங்களைத் தான் திரைப்படமாக இயக்கினேன் என நடிகை தேவயானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Actress Devayani: தமிழ் மக்களுக்கு மிகவும் பரிட்சையமான நடிகை தேவயானி. திருமணத்திற்கு பின் அதிகம் படம் நடிப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர், பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இப்போது அவர் இயக்கிய குறும்படம் ஒன்று சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது.
இயக்குநராக விருது பெற்ற தேவயானி
கைக்குட்டை ராணி என்ற பெயரில் அவர் இயக்கிய குறும்படம் மூலம் தேவயானி கதை ஆசிரியராகவும் இயக்குநராகவும் அடி எடுத்து வைத்துள்ளார். 20 நிமிடங்கள் கொண்ட இந்த கைக்குட்டை ராணி திரைப்படம் குழந்தைகளின் உணர்வுகளை மையப்படுத்தி எடுத்ததற்காக 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகளின் குறும்பட விருதை பெற்றுள்ளது.
டைரக்ஷன் மேல ஆசை
இந்நிலையில், இந்த குறும்படம் உருவாக்க ஆரம்பித்தது முதல், இயக்கி வெளியிட்டது வரையிலான பயணத்தை எஸ்எஸ் மியூசிக் யூடியூபிற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், " இத்தன வருஷமா சினிமாவுல படம் நடிச்சிருக்கேன். நிறைய நல்ல நல்ல டைரக்டர் கூட வேலை செஞ்சிருக்கேன். என்னோட ஹஸ்பெண்ட் கூட டைரக்டர் தான். அதுனால டைரக்ஷன் மேலயும் கொஞ்சம் ஆசை இருந்தது. சரி இதையும் செஞ்சு பாத்திடலாம்ன்னு நினைச்சேன்.